Wednesday 10 December 2014

எப்பவும் நாங்கள்...

எப்பவும் நாங்கள்
எங்கட பக்கத்து நிலைமைகளை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட விருப்பங்களைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் விருப்பங்களை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்கட தேவைகளைப் பற்றியே
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் தேவைகளை
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
எப்பவும் நாங்கள்
எங்களுக்கு உதவுவோரை அல்லது வருவாயை
எண்ணிக்கொள்வதாலேயே
அடுத்தவர் எதிர்பார்க்கும்
உதவுவோரையோ வருவாயையோ
புரிந்துகொள்ள முடியாமல் போகிறதே!
இப்படி எல்லாம்
எண்ணிப் பார்க்கின்ற வேளை
உன்னைப் போல
உன் அயலானையும் விரும்பு (நேசி)
என்றன்றே பெரியோர் சொல்லி வைச்சதை
எப்பவும் நாங்கள்
எண்ணிப் பார்ப்பதில்லையே!

16 comments:

  1. வணக்கம்
    காலம் உணர்ந்து வடித்த கவி
    மானம் போற்றும் மனிதர்களுக்கு
    மனதை நெருடும் கவி..

    சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. உண்மைதான் சுயநலவாதிகளாகிவிட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. அருமை அருமை
    கவிதை என்னை விட்டு கொஞ்சம் விலகி
    யோசிக்கவைத்தது
    மனம் கவர்ந்த படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. உண்மைதான் .சரியான கேள்வி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. மிகவும் சரியான கேள்வி! சிந்திக்க வைக்கின்றது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. ஐயா!.. அற்புதமான மிகத் தேவையான கேள்வி!

    ஒரு வட்டத்தை இட்டு அதற்குள்ளேயே நிற்பதால்
    இந்த ’நான்’ ’எனது’ என்பது ஓங்கி நிற்கின்றது!

    உணர வைத்தீர்கள்! மிக அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. கவிதை அற்புதம் நண்பரே... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. உண்மை. நம்மைப் பற்றியே சிந்திக்கிறோம். பிறரைப் பற்றி சிந்திப்பதில்லை. யோசிக்க வைத்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.