Saturday, 31 January 2015

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக

இலங்கையிலிருந்து மதுரை வானூர்தி நிலையத்தில் வந்திறங்கும் வேளை...
வானூர் இலக்கம் : Mehin Lanka / MJ307
மதுரையில் வந்திறங்கும் நாள் : 02/02/2015 திங்கட்கிழமை
மதுரையில் வந்திறங்கும் நேரம் : 13:25 / 01:25pm
பயணி விடுவிப்பு நேரம் ஒரு மணி நேரமாகக் கருதினால் 02:30pm இன் பின் 03:30pm வரை சந்திக்கலாம். பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் சந்திக்கலாம்.
தொடர்புகளுக்கு : சுஷ்ரூவா - 091 087 54979451

இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூரில் இருந்து திரும்பி மதுரை வானூர்தி நிலையத்தில் இருந்து இலங்கைக்குக் திரும்பும் வேளை...
மதுரையில் இருந்து திரும்பும் நாள் : 07/02/2015 சனிக்கிழமை
மதுரையில் இருந்து திரும்பும் நேரம் : 11:25am
பயணி விடுவிப்பு நேரம் மூன்று மணி நேரமாகக் கருதினால் 08:30am இன் முன் 06:00am இலிருந்து சந்திக்கலாம்.
ஏமாற்றங்களைத் தவிர்த்து சந்திப்பை உறுதிப்படுத்த : சுஷ்ரூவா - 091 087 54979451

இதுவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த அறிஞர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் உங்கள் யாழ்பாவாணனின் மிக்க நன்றி.

தமிழ்நண்பர்கள்.கொம் அறிஞர் வினோத்-கன்னியாகுமரி, புலவர் இராமானுஜம், கவியாழி கண்ணாதாசன் போன்ற பெரியோர்கள் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். இம்முறை நேரமின்மை காரணமாக இயலாமல் போனாலும் அடுத்த தடவை சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் வருகை தந்து பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்

முன்னைய தகவலறிய:
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்
https://mhcd7.wordpress.com/2015/01/24/கடலூர்-வடலூரில்-உளநல-வழி/

Tuesday, 27 January 2015

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதென
எத்தனையோ சிறப்பு மின்னஞ்சல்கள்
உங்களுக்கு வந்தவண்ணமிருக்குமே!
எத்தனையோ நம்மாளுகள்
அத்தனையும் உண்மையென நம்பி
எத்தனையோ இலட்சங்கள் செலவாக்கி
அத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ?
எத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்
அத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே
எத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்
அத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே!


Wednesday, 21 January 2015

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!


மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழகப் பதிவர்களே!  உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 - 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். தைப்பூசத் திருவிழாவின் பின் 05 அல்லது 06 ஆம் திகதி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்த யாழ்பாவாணன் ஆகிய நான் எண்ணியுள்ளேன்.

வடலூருக்கு அண்மையில் வாழும் பதிவர்கள் எல்லோரும் வருகை தந்து சந்திக்குமாறு பணிவாக அழைக்கின்றேன். இவ்விலக்கியக் கருத்தரங்கில் படைப்பாக்கமும் வலைப்பூக்கள், கருத்துக்களங்கள், மின்வெளியீடுகள் பற்றியும் கலந்துரையாடலாம் என விரும்புகின்றேன். கருத்தரங்கு மற்றும் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா - 091 087 54979451

2011 சித்திரை இந்திய-தமிழகம், சென்னைக்கு வந்த வேளை பலரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இம்முறையும் சென்னையில் இருந்து தொலைதூரம் சென்று தங்கியிருக்க வேண்டியிருப்பதால் பலரைச் சந்திக்க முடியாமல் போகலாம். ஆயினும், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மண்ணின் வானூர்தி இறங்கு தளத்தில் எனது பயணம் தொடர்புபட்டுள்ளதால் விரும்பும் பதிவர்கள் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் வந்து சந்திக்கவும் முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
http://yppubs.blogspot.com/
https://yarlpavanan.wordpress.com/
http://paapunaya.blogspot.com/
http://eluththugal.blogspot.com/
https://mhcd7.wordpress.com/

Monday, 19 January 2015

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?

1. மாதவி-கோவலன்

2. கண்ணகி-கோவலன்

எஞ்சிய ஈழத் தமிழரை...

இலங்கையில் எப்பகுதியேனும் தமிழருக்கு உரியதல்ல - கோத்தபாய ராஜபக்ச.
 
சிங்களவர் நிலப்பரப்பிலே தமிழர் அத்துமீறிக் குடியேறியோர்களே - எல்லாவெல மேதானந்த தேரர்.
 
இவை தான் இன்றைய சுடச்சுடக் கிடைத்த செய்திகள். இவை மீளவும் ஈழப் போர் ஏற்பட அடித்தளமிடக்கூடும் அல்லது புலம்பெயர் தமிழரால் இலங்கைக்கு வெளிநாட்டு நெருக்கடியை ஏற்படுத்த வல்லது. இது பற்றிச் சிங்கள அறிஞர்கள் சிந்தித்தார்களோ எனக்குத் தெரியாது.
 
குபேரன் என்ற பணக்காரன் இராவணன் என்ற அரசனுக்கு இலங்கையை அன்பளிப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அரசனான இராவணன் ஒரு தமிழன். இராமன் இராவணனை அழித்த பின் அவனது உறவுக்காரரையே ஆட்சியில் அமர்த்தினான். இப்படித்தான் தமிழர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.
 
பின்னொரு காலத்தில் விஜயன், குவேனி உட்பட 600 ஆட்கள் இந்தியாவில் இருந்து தென்னிலங்கையில் வந்து குடியேறியதாகவும். அவர்களே சிங்களவர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், சோழ மன்னர் ஆட்சியில் பௌத்தம் பரவிய வேளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் அது பரவியதாம். இவ்வாறே பௌத்தம் தழுவியோர் சிங்களத்தைப் பாவித்தமையால் பின்நாளில் அவர்கள் சிங்களவர் ஆயினர் என்றும் கூறப்படுகிறது.
 
என்னறிவுக்கெட்டியவரை இலங்கை தமிழருக்கு உரியது; சிங்களவர் பின்நாளில் வந்தேறு குடிகளாயினர். எனவே கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகள் பொய் என்கிறேன்.
 
புத்தர் ஓர் அரசன். திருமணமாகி ஆண் பிள்ளைக்கு அப்பா. அரச, இல்லற வாழ்வை விட்டொதுங்கி தனது பட்டறிவால் உலகுக்கு வழிகாட்டியவர். பௌத்தம் ஒரு மதமல்ல. புத்தரின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்ட மக்கள் குடும்பம். இவ்வுண்மை தெரியாத தேரர் எல்லாவெல அரசியலில் ஈடுபட்டால், புத்தருக்கு முந்திய தமிழரின் வரலாற்றை எப்படி அறிந்திருப்பர்.
 
இராணுவத்திலிருந்து ஓடித்தப்பி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய, மகிந்த ஆட்சியில் படைத்துறைச் செயலரான ஒழுக்கமற்றவருக்கு தமிழரின் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
என் உயிரிலும் மேலான தமிழறிஞர்களே! தமிழரின் தாயகம் இலங்கை என்றும் சிங்களவர் வந்தேறு குடிகள் என்றும் சான்றுப்படுத்தி உலக அரங்கில் முன்வைக்க வாருங்கள். இல்லையேல் எஞ்சியுள்ள ஈழத் தமிழரும் கடலில் குதித்து சாக நேரிடுமே!
 
கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகளைப் பொய்யெனச் சான்றுப்படுத்தாவிடின் சிங்களவரே, எஞ்சிய ஈழத் தமிழரைக் கடலில் குதிக்க வைத்துச் சாகவைப்பார்களே!
 
 

Tuesday, 6 January 2015

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.

உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!

என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)

என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.