Tuesday, 28 July 2015

அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?

அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!

படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை

Sunday, 26 July 2015

குடித்த பின் விளைவு

குடிகாரன் பேச்சுப் பிழை என்றால்
பார்வையும் அல்லவா பிழைக்கிறதே
"குடி மயக்கியது ஓ!"

குடிகாரியின் பார்வை பிழை என்றால்
தெருவழியே வயிற்றால அடிக்கிறாளே
"குடி கலக்கியது ஓ!"

Thursday, 23 July 2015

சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு


கட கட வென கொத்துற சாப்பாடு
ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு
ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு
சூ சூ வென சூப்பிற சாப்பாடு
சா சா வென நக்கிற சாப்பாடு
என்றெல்லாம் பலரை இழுக்கிற
தெருத் தெருவாய்
சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு
என்றவாறு பல உணவகங்கள் இருக்க
ஆங்கொன்றில்
நம்மாளு மூக்குமுட்ட உண்டாராம்...
அடுத்தநாளு
வயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...
மருத்துவரை நாடினாராம்!
மருத்துவரும்
நம்மாளின் நாடி பிடித்துப் போட்டு
நல்ல பேதி  குடித்தாச்சு
இன்னும் நாலு தடவை
வயிற்றால அடிக்கலாம் - அதன் பின்
'அண்ணா' கோப்பி பருக
அல்லது
'அறிவு' தேன் பருக
நின்று விடும் - ஆனால்
நீண்ட ஆயுளுக்குப் பாரும்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
மருத்துவரை நாடி
கடுக்காய்ப் பேதி குடிக்கவேணும்
முடியாவிட்டால்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
வயிற்றால அடிக்க வைக்கிற
சாப்பாடு விக்கிற உணவகங்களில
மூக்குமுட்ட உண்டு களிக்கலாமே!

*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து

Saturday, 11 July 2015

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
சித்தார்த்த(புத்த)னின்
நல் வழிகாட்டலை விரும்பியே
சோழ மன்னன் ஆட்சியில் தான்
இந்தியாவில் தமிழர்
பௌத்தத்தைக் கடைப்பிடிக்க முயன்றனரே!
குமரிக்(லெமூரியா)கண்டமீன்ற
இந்தியா அண்ணன் என்றால்
இலங்கை தம்பி போல
இலங்கையரும்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தனரே!
இந்தியாவில் ஆரியம்
தான் தோன்றித்தனமாக நுழைய
பௌத்தத்தை விரும்பியோர்
சிங்களத்தாலே தான்
பௌத்தத்தைப் பின்பற்ற வேண்டியுமிருந்ததே!
அண்ணன் மாறினால்
தம்பி என்ன செய்வான்?
இலங்கையிலும்
சிங்களத்தாலே தான்
தமிழர் பௌத்தத்தைப் பின்பற்றலாயினரே!
இலங்கையில்
சிங்களத்தாலே பௌத்தத்தைப் பின்பற்றிய
தமிழர் சிங்களவரானது போல
இந்தியாவிலும் பாரும்
தமிழிலிருந்து பிரிந்த மொழிகளால் ஆன
மலையாளி, தெலுங்கர், கன்னடத்தார் என
தமிழர் மாறிவிட்டனர் போலும்!
இன்றைய நிலையில்
இலங்கையில் தமிழர்
சிங்களவராலும்
இந்தியாவில் தமிழர்
மலையாளியாலும்
தெலுங்கராலும் கன்னடத்தாராலும்
துன்புறுவதைப் பார்த்தால்
தமிழராலே
தமிழர் அழிவதாகத் தெரிகிறதே!
நான் நினைக்கின்றேன்
உலகெங்கும்
தமிழர் தான் வாழ்ந்திருப்பார்கள்...
உலகத்தையே
தமிழர் தான் ஆண்டிருப்பார்கள்...
எப்படியிருந்தும்
மதம் மாறியோ மொழி மாறியோ
தமிழரே தமிழராலே அழிந்து
தனக்கென்று
நாடு ஒன்று இன்றியே
அழியுமினம் தமிழினமாச்சே!

முயற்சி செய்


"முடியாது" என்பது
மனித அகரமுதலியில்
இருக்க முடியாது - அப்ப
முடியும் என முடிந்த வரை
முயற்சி செய்!

Friday, 3 July 2015

முகநூல் வழிக் கொள்ளை!

வெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல
அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...

இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html


மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html