Sunday 26 January 2014

சான்றிதழை விடச் செயலாற்றலே பெரிது

எனக்கு
நண்பர்களை விட
எதிரிகள் தான் ஏராளம்
அறிவாளிகள் யாரும்
எனக்கு
எதிரிகள் இல்லைப் பாரும்...
அதனால் தான்
என்னையும்
சிலர் அறிவாளி என்கிறாங்களே!
நான் பெற்ற
கல்விச் சான்றிதழ் கட்டுகளை
சிலர்
அள்ளிக்கொண்டு போனாங்க
நானும்
படித்ததை எல்லாம்
வலைப்பூ, வலைத்தளம் எனப் போட்டுத்தள்ள
என் புலைமை அரங்கேற
முட்டாள் எதிரிகள் தானுங்க
மீளவும் வந்து
என் வீட்டு வாசல் படியிலே
அத்தனையையும்
வீசிப்போட்டு ஓடிட்டாங்களே!
இத்தால்
நானறிந்தது என்னவென்றால்
கல்வி என்பது
சான்றிதழ் (Certificate) அல்ல
செயலாற்றல் (Activity) என்றே!

நல்ல நாடகமெல்லோ...

பெண்ணொருத்தி
என்னோடு கூடி வாழ்ந்துவிட்டதாய்
கதையளக்க - அது
நாடெங்கும் பரவ
திருமணப் பேச்சு நேரம்
இந்த வெடிகுண்டு
என்னைத் தாக்க
அன்பிற்கினிய தோழிகள்
அப்பெண்ணைத் துரத்த
அதெல்லாம்
மூன்றாம் அகவையிலென
அவளும்
அவிட்டுவிட்டிட்டு ஓட
நல்ல நாடகமாயிற்று!
என் காதலி தானென்று
உறவுக்காரப் பெண்
பொய்யுரைக்க
என் மீது
விருப்பம் கொண்ட
பல பெண்கள்
எனக்குத் தெரிவிக்காமலே
ஓடி ஒதுங்க
உறவில்லாத பெண்ணைக் கட்டி
நானும்
குடும்பம் நடாத்த
நல்ல நாடகமாயிற்று!
பெண் தவறு செய்தால்
வரலாறு
ஆண் தவறு செய்தால்
சிறு நிகழ்வென
என் வாழ்வில்
நடந்த நாடகங்கள் செல்ல
தமிழ், தமிழர் பற்றுச் சீமான்
மூன்றாண்டுகள்
தன்னைக் காதலித்துப் போட்டு
மணமுடிக்க மறுக்கிறாரென
பெண்ணொருத்தி
மூக்காலே சினுங்குவது
நல்ல நாடகமெல்லோ...
என்னோடு
படுக்கை விரித்துக் கிடந்தவரென்றோ
என்னைக் காதலித்தவரென்றோ
கூப்பாடு போடும் பெண்களே
நீங்களே
உங்களைக் கெட்டவளெனக் காட்டி
வரலாற்று அடையாளம் குத்தி
நாடகமாடுவதனால்
ஆண்களுக்குக் கேடு
கிட்டாதெனப் படியுங்கள்!

நட்புப் பற்றிச் சில...


கை குலுக்கினால் போல
நட்பு மலராது
நல்ல அன்போடு
பழகினால் மட்டுமே!
பொன், பொருள், பணம்
அன்பளிப்பாகக் கொடுத்தால் போல
நட்பு மலராது
ஆபத்து வேளையில்
உதவினால் மட்டுமே!
நாடு, மொழி, இனம், மதம், பால்
வேறுபாடுகளின்றி மலரும் நட்புக்கு
பிரிவே கிடையாது
பிரிந்தால் - அது
உண்மையான நட்பல்லவே!

கொடுக்கல் வாங்கலின் போது...

கேட்டால் கொடுப்பது
கடன் - அப்ப
வீணாகக் கேட்டு வேண்டாதே!
கேளாமல் கொடுப்பது
உதவி - அது
இரக்கமுள்ளவர் செயலென அறி!
இடக்கை கொடுப்பது
வலக்கைக்குத் தெரியக்கூடாதாம் - ஏனெனில்
கொடுத்தவரையும்
கொடுத்ததன் பெறுமதியையும்
பெற்றவரல்லவா சொல்லவேண்டும்!
உப்பிட்டவரைக் கூட
உள்ளளவும் நினை - அதாவது
கடுகளவு உதவியானாலும்
உதவியோரை மறத்தலாகாதே!

Saturday 18 January 2014

சாவடைந்தவர்களின் உயிரை மீட்டுத் தருவீர்களா?


முகநூலில்(facebook) இல் பார்த்த அலைவரிசை(channel)-4, 2011இல்  வெளியிட்ட ஓளி, ஒலி (Video) பட இணைப்பை பார்வையிடுவதற்காக - இங்கு
இணைப்புச் செய்து கருத்துப்பகிர்கிறேன்!
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/
(Sri Lanka's Killing Fields)
http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc&feature=youtu.be
(Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video])

நாளுக்கு நாள் அறிவியலில்
ஆளுக்கொரு கண்டுபிடிப்பாக
எத்தனையோ கோடிக்கணக்கில
கண்டுபிடித்து இருந்தாலும்
சாவடைந்தவர்களின்
உயிரை மீட்டுத் தரவோ
மனிதன் சாகாமலிருக்கவோ
அறிவியலாளர்கள்
எதனையும் கண்டு பிடிக்கவில்லையே!
ஆன்மீகவாதிகள் கூறும்
கடவுள் கூட
பெண்களை வன்முறையாகக் கெடுக்கின்ற
ஆண்களின் ஆணுறுப்புகளை
புளுப்பிடித்து அழுகச்செய்து
ஒறுப்பை(தண்டனையை) வழங்கியதுமில்லையே!
அறிவியலாளர்களும் கடவுளும்
தமிழினத்தைத் திரும்பிப் பார்க்காத வேளை
அலைவரிசை(channel)-4
இலங்கைக்குள் எப்படியோ ஊடுருவி
போரில் தமிழரின் இழிவுநிலையை
ஓளி, ஒலி நாடாவில் பதிந்து
அறிவியலாளர்களும் கடவுளும்
நம்பும்படி செய்துள்ளமையை
பாராட்டித் தான் ஆகவேண்டும்!
அலைவரிசை(channel)-4 கூறும்
போரில் பாதிப்புற்ற ஒருவரென்பதால்
இலங்கைத் தமிழர் பட்ட
துன்பங்களின் சுருங்கிய தொகுப்பே
அலைவரிசை(channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவின் கருப்பொருளாகும்!
உங்கள் காலில் விழுந்து
மன்றாடிக் கேட்கின்றேன்
இக்காட்சிகளைப் பார்த்து
எவரும்
தற்கொலை செய்துவிடாதீர்கள்...
இக்காட்சிகளில் வரும்
குற்றவாளிகளுக்கு
ஒறுப்பை(தண்டனையை) வழங்க
உலக நாடுகளை
அணிதிரட்ட முன்வாருங்கள்...
"சாவடைந்தவர்களின் உயிரை
மீட்டுத் தருவீர்களா?" என்று கேட்கின்ற
இலங்கையருக்கு
அலைவரிசை (channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவை
துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தியே
தமிழர் செய்ய வேண்டிய
கடமை இவையே!

Monday 13 January 2014

தைப்பொங்கல்


பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!

வீட்டுக்கு முன்னே பாரப்பா
மாட்டுச் சாணமெடுத்து மெழுகியாச்சு
அம்மா அறுகம் புல்லெடுத்து வா - அடி
எம்மவளே அழகாய் கோலமிடடி
மணி ஆறாக முன்னே
கணீரென்ற அப்பாவின் குரல்!

பகலவன் வரவுக்கு முன்னே
நம்மவள் கோலமிட்டாள்
அம்மாவும் அறுகுவைத்து
பிள்ளையார் பிடித்துவைக்க
அண்ணன் நிறைகுடம் வைக்க
பாட்டி பிடித்த புதடுப்பு வைத்து - அப்பா
புதுப்பானையில தண்ணி விட்டு - அந்த
அடுப்பில நெருப்பை மூட்ட
அப்பு வந்து
பானைக்குள்ளே பாலை விட
எங்கட தம்மி
வெடி கொழுத்திப் போட
எங்கட வீட்டில
பொங்கல் பொங்கத் தொடங்கியாச்சு!

தென்னம் பாளை வைத்து மூட்டிய
பொங்கல் பானை அடுப்பெரிய - அந்த
அடுப்பைச் சுற்றி நம்மாளுகள்
எடுப்பாக எல்லோரும்
பொங்கல் பானை பொங்கி வழிய
பகலவன் வரவைக் காண
கூடிநிற்கக் காண்பதே அழகு!

பகலில் ஒளி தருவதால்
பகல் அவன் பகலவன்
மண்ணிற்கும் நிலவுக்கும்
கதிர் ஒளி பரப்புவதால்
கதிர் அவன் கதிரவன்
அண்டவெளிக்கு முதல்வன் என்பதால்
ஞாயிறு (சூரியன்) என்கிறோம் - அந்தப்
பகலவன் வரவைக் கண்டு - தையில்
பொங்கிப் படைப்பதேன்?

நெல் விதைக்கக் களை பிடுங்க
கதிர் தள்ளி நெல் விளைய
விளைந்த நெல்லை அறுவடை செய்ய
வேளைக்கு வேளை மழை கொட்டிய
நாளுக்கு நாள் நன்மை வழங்கிய
காலைக் கதிரவனுக்கு நன்றி கூறவே!

பொங்கல் பானை பொங்கி வழிய
புது அரிசி போட்டுக் கலக்கி
வெந்து வர வெல்லம் போட்டு
அடுப்புத் தணித்து முடித்து வைக்க
இலை போட்டுப் படையல் வைக்க
கூடி நின்ற எல்லோரும் காண
பொங்கல் இனிக்கப் பகலவன் வந்தானே!

படைத்த பொங்கலை அப்பா உண்ண
பானைப் பொங்கலைப் பங்கிட்டு உண்ண
விடிகாலைப் பொழுதும் பொங்கிக் கழிய
நண்பர்கள் வரவும் போக்கும் தொடங்க
உறவைத் தேடிநாம் போயும் வர
பொங்கல் நாள் இனிதே முடிந்ததே!

பொங்கலோ பொங்கல் - தைப்
பொங்கலோ பொங்கல்!



அறிஞர்களே! உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த நான் ஓர் களம் அமைத்துள்ளேன். அதாவது "தமிழா! நாம் பேசுவது தமிழா!" http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உங்கள் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்த முன்வாருங்கள்.

பொங்கல் செலவு

புதுப்பானை, விறகு, அடுப்பு என
ஐந்நூறு உரூபா ஆச்சு
அரிசி எண்பது உரூபா ஆச்சு
வெல்லம் நூறு உரூபா ஆச்சு
தேங்காய் அறுபது உரூபா ஆச்சு
கசுக்கொட்டை, ஏலக்காய்,
முந்திரிகை வற்றல், கரும்பு,
பழங்கள், வெற்றிலை, பாக்கு,
சூடம் (கற்பூரம்), ஊதுபத்தி (சாம்பிராணி) என
எல்லாச் சில்லறைக்கும்
முன்னூற்று முப்பது உரூபா ஆச்சு
எனது
வருவாயைக் கணக்குப் பார்த்தால்
எழுநூற்று எழுபது உரூபா ஆச்சு
எஞ்சிய முன்னூறு உரூபா
எவர் தருவார் இங்கே
நாளைக்கு நான்
தைப்பொங்கல் பொங்கவே!

பொங்கலுக்கு முதல் நாள்


தெருவெங்கும் வணிகம் சூடுபிடித்திருக்க
பொங்கலுக்கு வெல்லம், பழம் வேண்ட
நானும் நடைபோட்டேன்!
ஆங்கோர் ஓரமாய்
ஆணும் பெண்ணும்
போகிற வழியிலே விழுந்து கிடந்தாங்க...
குடிதண்ணிக் (மதுபானக்) கடை
பொங்கலுக்குப் பூட்டென்று
முதல்நாளே
மூக்குமுட்டக் குடித்ததன் விளைவாம்!
அங்காடி முன்னே
கையேந்துவோரைக் (பிச்சைக்காரரைக்) காணவில்லை
நாளைக்குப் பொங்கல் என்பதால்
பொங்கின பொங்கலை விட
தண்டின பொங்கல் நிறையுமென்றோ
வீட்டுக்கு வருகை தர
ஓய்வு எடுக்கிறார்கள் போலும்!

கடவுளே வாரும்

பொங்கல் நாள்
புத்தாண்டு நாள்
எல்லாம்
நல்லெண்ண வழிகாட்டலை
முன்வைக்கும் நாளே!
நம்மாளுகளுக்கு
நன்நாள், பெருநாள் எதுவானாலும்
குடிப்பதைப் புகைப்பதை நிறுத்தவோ
கெட்ட செயலை விலக்கவோ
எண்ணுவதில்லையே!
பண்பாட்டை வெளிப்படுத்தும்
பெருநாள் பொழுதுகளில்
பண்பாட்டைச் சீரழிக்கும்
நம்மாளுகளை
வந்தால் கண்டுகொள்வீர்
கடவுளே வாரும்!

Saturday 4 January 2014

காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!


"காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே!" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.

1.
நீ
என்னை
காதலிக்கத் தொடங்கியதுமே
என்னுள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சி
நீ
என்னைப் பிரிந்ததுமே
அதுவும்
என்னை விட்டு
தொலைதூரத்திற்கு ஓடிப் போய்விட்டதே!

2.
கையில காசிருக்கும் வரை
கைகுலுக்கினாயே...
கையறுநிலை வந்ததுமே
கைநழுவி விட்டாயே...
கை கனத்தால் தான்
கைகுலுக்குவாய் என்றால்
நானே
கைகழுவிவிடுகிறேனே!

3.
கண்ணை
இமை காப்பது போல
என்னை
நீ காப்பாய் என்றாய்
நம்மி
உன்னை நானும் அணைத்தேன்
வெம்பி அழுகிறேன்
என் நீண்ட வயிற்றைக் கண்டு
நீயும்
எங்கேயோ ஓடி ஒளிந்ததாலே!

நீதிதேவதையின் கண்ணை ஏன் கட்டினார்கள்?


திரைப்படங்களிலே தான்
நீதிமன்று எப்படியிருக்குமென
நான் பார்த்தேன்!
கறுப்புத்துணியாலே
நீதிதேவதையின் கண்ணை
ஏன் தானோ
கட்டி வைத்திருக்கிறார்களென
எண்ணிப்பார்த்த நினைவிருக்கு!
கையூட்டு (லஞ்சம்) வேண்டும்
சான்று கூறுவோர் (சாட்சிகள்),
காவற்றுறையினர்,
சட்டவாளர்கள் கூறும்
கருத்துகளைப் பார்க்காமல் இருக்கவா
"நீதிதேவதையின்
கண்ணைக் கட்டினார்களோ!" என
திரைப்படக் கதை வசனமொன்று
நினைவிற்கு வருகிறதே!
உண்மையிலேயே
குற்றமிழைத்தவன் தப்பித்துக்கொள்ள
ஏதுமறியாதவனே
ஒறுப்புக்கு (தண்டனைக்கு) உள்ளாவதை
நீதிதேவதை பார்க்கக்கூடாதென
கறுப்புத்துணியால் கண்ணைக் கட்டியோர்
எண்ணிப்பார்த்தனர் போலும்!
சட்டம், நீதி என்பன
கையூட்டுக் (லஞ்சக்) கைகளிலா
சட்டம், நீதி பேணுவோரின் செயலிலா
ஆண்டவா - நீரும்
இங்குள்ளை நிலைமையைப் பார்க்கிறீரா?
எப்போதும் பத்திரிகைகளில்
நீதி கிடைக்கவில்லையெனத் தான்
செய்திகள் வெளிவருகிறதே!

முறித்துப்போடாதே!


தேவைப்பட்டவருக்கு மட்டும் தான்
எம்மை
நல்லவர்களாக அடையாளப்படுத்த முடிகிறது
பயனீட்ட விரும்புவோர் மட்டும் தான்
எமக்கு மதிப்பளிக்கின்றனர்
தன்னைப் போல
நாமும் என்றெண்ணியவர்கள்
இன்னும்
அதிகம் விரும்பலாம்
இவர்களை
ஒருபோதும் முறித்துப்போடாதே
இவர்களால் தான்
உலகமே
உன்னைக் கண்டுகொள்கின்றது!

நல்ல பெயர் வாங்க...

பள்ளியில் படிக்கையில்
வள்ளியின் எழுதுகோலைப் பறிக்க
ஆசிரியர் அடிக்க
எனக்குக் கிடைத்ததோ
கெட்ட பெயர்!
தெருவில விழுந்து கிடந்த
தருணியைத் தூக்கிக் கொண்டு போய்
மருத்துவரிடம் காட்டி
சுகமடைய உதவியதால்
ஊர் கூடி வாழ்த்தியதால்
எனக்குக் கிடைத்ததோ
நல்ல பெயர்!
அன்று
நான் நினைத்தேன்
அப்பா, அம்மா வைத்தது
நல்ல பெயர் என்றே...
ஆனால், நேற்று
நொடிப் பொழுதில் கிடைப்பது
கெட்ட பெயர் என்றும்
நல்ல பெயர் எடுக்க
நெடுநாள் காத்திருக்க வேண்டுமென
நானறிந்தாலும் கூட...
நம் செயலால்
நன்மை பெற்றோர் கூறும்
நன்றியறிதலே
நற்பெயரைத் தருகிறதென

இன்று தான் படித்தேன்!