வறுமை என்பது
வாழ்க்கையை நடாத்த
ஏதுமின்றித் துயருறும் நிலையா?
வறுமை என்பது
கிடைக்க வேண்டியது
கிடைக்காமையால் ஏற்பட்டதா?
வறுமை என்பது
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா?
வறுமையை விரட்ட
முயலாமை இருந்ததா?
வறுமையைப் போக்க
வழிகள் கிட்டவில்லையா?
உடல்நலக் குறைவா
முடமான உடலா
தொழிலின்றி வறுமையை அணைக்க...
பாவலர்களே!
எங்கும் எதிலும் எப்போதும்
வறுமை இருப்பதாகப் பாடுவதை
நிறுத்துங்கள்...
வறுமையைப் போக்க
வழிகாட்டுங்கள்
வறுமையை விரட்டப் போராட
கற்றுக்கொடுங்கள்
வறுமை என்பது
மறுமையிலும் வாழ்வில் நெருங்க
இடமளிக்காமல் பாபுனையுங்களேன்!
பாவலர்களுக்கு வறுமையே
பாவன்மையை ஊட்டுமென்றால்
நம்மாளுகளை வறுமை நெருங்கினால்
நல்வாழ்வை அமைக்க
நெருங்கிய வறுமையும் வழிகாட்டுமே!
வறுமையால் சாவு
வறுமையால் பின்னடைவு
வறுமையால் மருத்துவராகவில்லை
வறுமையால் ஊரே ஒதுக்கியது
போதும் போதும் போதும்
வறுமை தந்த வெறுமையால்
இன்னும்
எத்தனையோ துயரச் செய்திகள்...
வறுமை தந்த துயரச் செய்திகளென
இனிமேலும்
எம் காதுக்கெட்டாமல் இருக்க
இனியொரு வழிசெய்வோம் வாருங்கள்!
வறுமை (http://tamilnanbargal.com/node/40668) என்ற கவிதைக்குப் பதிலாக எழுதியது.
அருமை அனைத்தும் அற்புதமான வைரவரிகள் வாழ்த்துகள் நண்பரே...
ReplyDeleteஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகளும்.....
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஉண்மையான வரிகள்... வினாவுக்குள் வினா தொடுத்து மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
கவிதை அருமை...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மிக்க நன்றி.
அருமையான வரிகல். இந்தப் புத்தாண்டிலாவது வறுமை சிறிதாவது ஒழிந்த்டியாதா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்து
ReplyDeleteVetha-Langathilakam
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அன்புள்ள அய்யா!
ReplyDeleteவணக்கம்!
வறுமை தந்த துயரச் செய்திகள்
யாவும்
தூக்கி எறியப் படட்டும்
தங்களது தூயக் கவிதையால்
துன்பத்தை துடைக்கும் தூயக் கவிதை அருமை!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
( (நண்பரே குழலின்னிசை தங்களை வரவேற்கின்றது வலைப் பூ நோக்கி! நன்றி!)
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.