Saturday, 13 December 2014
காதலும் பூக்களைப் போலவே!
பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ!
மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலே காலம் கடந்து பிரிவதற்கே!
பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!
பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதைநடை அண்ணா ! கடைசி வரி , வரி அல்ல , வலி !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்ல ஒப்பீடு ! ரசித்தேன் !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ!
ReplyDeleteaRUMAI.....
Vetha.Langathilakam.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அருமையாக இருக்கிறது கவிதையின் நடை....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி.
பொருத்தமான ஒப்புகை. வலைச்சரத்தில் இன்று உங்களை கில்லர்ஜி மூலமாகக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நன்றாக இருக்கின்றது நண்பரே! பொருத்தமான ஒப்புமை!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.