Monday 7 July 2014

எறும்பூரக் கல் தேயுமாப் போல...

ஏதோ
என் எதிரி
என்னைத் தூற்றிக்கொண்டே இருந்தார்...
ஏன்டா
என்றும் தொடருகின்றாய் என்று கேட்க
எறும்பூரக் கல் தேயுமாப் போல
தன்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படுமாமே!
எதிரியின்
தூற்றல் எல்லாம் பொய்யென
நான் கூட
வெளிப்படுத்திய
என்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படாதா?!
கோட்பாடுகளும் முதுமொழிகளும்
எந்தவொரு பக்கத்தாருக்கும்
துணை நிற்பதில்லையே - அவை
எல்லோருக்கும் பொதுவானதே!

7 comments:

  1. வணக்கம்
    நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான கவிதை! எறும்பு ஊர ஊர கல் தேயும் என்பது......உண்மை....எல்லாவற்றிற்கும் காலம்....தான் பதில் சொல்லும்......

    ReplyDelete
  3. எரும்பை காரணம் காட்டியே கவிதை முடிச்சிட்டீங்களே,,,, அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் எனத் தோன்றுகிறது அய்யா!
    கவிதை இனிமை!
    பகிர்வினுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.