Tuesday 29 July 2014

பணம் பத்தும் செய்கிறது

வானிலே
கடலிலே
காற்றிலே
காட்டிலே
மேட்டிலே
வீட்டிலே
பள்ளியிலே
மத வழிபாட்டு இடங்களிலே
அரசப் பணி இடங்களிலே
அடடே
அரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே
காதலிலே
திருமணத்திலே
பிள்ளைப் பேற்றிலே
மருத்துவ மனைகளிலே
சுடுகாட்டிலே
இடுகாட்டிலே
நடுவழியிலே
எடுத்துக்காட்டாக
எத்தனை எத்தனை
இன்னும் உள்ளனவோ
அத்தனையிலும்
பணம் இருந்தால் போதும்
வென்றுவிடலாம்...
ஆண்டவனை வழிபடக் கூட
பணம் வேண்டினால் - ஏழை
பணம் வைத்திருப்பவனையா
வழிபட வேண்டும்?
அட கடவுளே...
பணம் பத்தும் செய்யுமென்றால்
ஏழைகள்
கடவுளை வழிபடாமல் இருக்கவும்
பணம் குறுக்கே வந்து நிற்கிறதே!

2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.

2 comments:

  1. கடவுளை வழி பட பணம் தேவையில்லையே! நண்பரே! கோயிலுக்குச் செல்லாமலேயே, இருக்கும் இடத்திலேயே தியானித்து வழிபடலாமே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.