Sunday 27 April 2014

நலமாக அமைய...

கேட்டீர்களா...
"நூலைப் போல சேலை
தாயைப் போல சேய்" என்று!
கேளுங்கோவேன்...
"பாலைப் போல வெள்ளை
செயலைப் போல அறிவு" என்று!
பார்த்தீர்களா...
"தேடல் உள்ள வரைக்குந் தான்
பெருக்கிக் கொள்ளலாம் அறிவு" என்பதை!
பாருங்கோவேன்...
"முயற்சி உள்ள வரைக்குந் தான்
வெற்றி எம்மை நாடி வரும்" என்பதை!
அறிந்தீர்களா...
"கேட்பதும் பார்ப்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய்" ஆகுமென!
அறியுங்கோவேன்...
"கற்றலும் அறிதலும் முயற்சி
கற்பிப்பதும் அறிவிப்பதும் பயிற்சி" ஆகுமென!
உணர்ந்தீர்களா...
"அப்பனும் அம்மையும் கூடி
உறவுக்கும் ஊருக்கும்
மக்களுக்கும் நாட்டுக்கும்
நற்பணி செய்வதற்கே
எம்மைப் பெற்றது" என்றறிக!
உணருங்கோவேன்...
"ஆணும் பெண்ணும் கூடி
நன்மக்களைப் பெற்றால் போதாது
நல்லறிவைப் புகட்டி
நல்லொழுக்கம் பேணி
ஆளுமை நிறைந்தவர்களாக ஆக்கினாலே
நாளைய தலைமுறை மட்டுமல்ல
தாயக மண்ணும் நலமாக அமைய" என்றறிக!

19 comments:

  1. உங்கள் எழுத்தின் எதிர்காலம் நலமாக அமைய ...தமிழ் மணத்தில் ஏன் இணைக்க முடியவில்லை என்பதை உடன் பாருங்கள் சகோ !
    நானும் இணைத்து வோட்டும் போட முயற்சித்தேன்,முடியவில்லை !

    ReplyDelete
    Replies
    1. தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

      Delete
    2. எனது பதிவு தமிழ்மணத்தில் இணைத்திருப்பதை உறுதிப்படுத்துகிறேன்.
      தங்கள் மதியுரையைக் கருத்தில் கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. சிறந்த, எக்காலத்திலும் என்னாட்டவர்க்கும் பொருந்தும் உண்மைகள்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. நிதர்சனமான உண்மை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்

    கவிதையின் வரிகள்....கருத்துமிக்கவை.. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  6. /// உறவுக்கும் ஊருக்கும்
    மக்களுக்கும் நாட்டுக்கும்
    நற்பணி செய்வதற்கே ///

    சிறப்பான வரிகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  7. Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  8. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  9. நிறைய நல்ல கருத்துகள்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை விரும்புகிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.