Saturday 5 April 2014

எப்பவெல்லாம் தோன்றும்...

உடனுக்குடன்
எல்லாம் தெரிந்து விட
நம்மாளுகள் எவரும்
கடவுள் அல்ல!
வயிறு கடிக்கும் போதே
பசியைத் தெரிந்து கொள்கிறான்
பசியைப் போக்க நினைக்கையிலே
வருவாயீட்டத் தெரிந்து கொள்கிறான்
நாலுகாசு கையில் இருக்கையிலே
செலவு செய்யத் தெரிந்து கொள்கிறான்
கட்டுப்பாடு இல்லாத வேளை
(சுதந்திரமாக உள்ள போது தான்)
தவறு செய்யத் தெரிந்து கொள்கிறான்
தவறு செய்யும் போது தான்
நன்மை, தீமை எதுவென
நம்மாளுகள் மறந்து விடுகின்றனரே!
தேவை வந்த போது தான்
தோழமையைத் தேடுகின்றார்
விருப்பம் வந்த போது தான்
உறவைப் பேணுகின்றார்
துன்பம் வந்த போது தான்
சூழலைப் படிக்கின்றார்
இன்பம் வந்த போது தான்
சூழலையே மறக்கின்றார்
சூழலை விட்டு ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தம்மையே உணருகின்றனரே!
சூழலே தம்மை ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தெளிவையே பெறுகின்றனரே!
தெளிவைப் பெற்ற பின்னர் தானே
எப்பவெல்லாம் தோன்றும்
எல்லாவற்றையும்
எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டால்
எதிர்காலமே இருளாகிவிடுமென்றே
நம்மாளுகளும் எண்ணிப்பார்க்கின்றனரே!

5 comments:

  1. சொன்னவை அனைத்தும் உண்மை. அவசியம் ஏற்பட்டலொழிய உண்மை உணரப்படுவது இல்லை . கவிதை நன்று ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. கண் கேட்ட பிறகுதானே சூரிய நமஸ்காரம் பண்ணனும்னு நினைக்கிறாங்க ?
    விழிப்பை தருகிறது உங்கள் கவிதை !

    ReplyDelete
  3. வரும் முன் தெளிவடைந்து விட்டால் பிரச்சனையே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.