Monday 19 January 2015

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?

1. மாதவி-கோவலன்

2. கண்ணகி-கோவலன்

16 comments:

  1. மாதவி கோவலன் என்பது தானே சரி ? தவியாய் தவிக்கிறேன் விடை அறிய :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.
      ஆயினும்,
      விடையை இரண்டு நாட்களின் பின் தருகின்றேன்.

      Delete
  2. மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் "வயந்தமாலை" யிடம் விளக்கிக் கூறுகையில்!

    காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய
    மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
    அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
    திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் . . .


    (ஊர் அலர் உரைத்த காதை, 54-57)
    என்று உரைக்கிறாள். மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.

    சோழ நாட்டுப் புகார் நகர வணிகனான மாசாத்துவானின் மகன் கோவலன். அவன் மனைவி கண்ணகி. கண்ணகியோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கோவலன் அந்நகரில் வாழ்ந்து வந்த நடன மாதான மாதவியின் ஆடற்கலையில் ஈடுபட்டுக் கண்ணகியைப் பிரிந்து சிலகாலம் மாதவியுடன் வாழ்கிறான். அப்போது அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் மணிமேகலை.

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இலக்கியச் சுவை சொட்டும்
      இனிய பதில் இது!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    பகவான்ஜி சொன்னது சரிதான்... இரண்டு நாட்களின் பின்பு பார்க்கலாம் விடையை.... ஆவலாக உள்ளேன்.த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. மாதவி - கோவலன் மகள் மணிமேகலை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. மாதவி - கோவலனின் மகளே மணிமேகலை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. மாதவி, கோவலன் மகள்தான் மணிமேகலை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. எனக்கு சந்தேகமா..இருக்குதுங்க...... எதாவது அவதாரம் எதுவும் இருந்திடப் போவுதுன்னுஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. மாறுபட்ட பதில் தந்துள்ளீர்கள்
      மிக்க நன்றி.

      Delete
  8. மணிமேகலையின் பெற்றோரை புதுவை வேலு கண்டுபிடித்துவிட்டாரே......ஐயா... இன்னுமா..தீர்ப்பு கூற கால தாமதம்....!!!!

    ReplyDelete
    Replies
    1. புதுவை வேலு அவர்களின் சான்றும்
      எல்லோரது எண்ணமும் ஒன்றே!

      கண்ணகி-கோவலன் இணையருக்குக் கிட்டாத செல்வம்
      மாதவி-கோவலன் இணையருக்குக் கிட்டிய செல்வம்
      "மணிமேகலை!"

      யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
      http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.