Monday 19 January 2015

எஞ்சிய ஈழத் தமிழரை...

இலங்கையில் எப்பகுதியேனும் தமிழருக்கு உரியதல்ல - கோத்தபாய ராஜபக்ச.
 
சிங்களவர் நிலப்பரப்பிலே தமிழர் அத்துமீறிக் குடியேறியோர்களே - எல்லாவெல மேதானந்த தேரர்.
 
இவை தான் இன்றைய சுடச்சுடக் கிடைத்த செய்திகள். இவை மீளவும் ஈழப் போர் ஏற்பட அடித்தளமிடக்கூடும் அல்லது புலம்பெயர் தமிழரால் இலங்கைக்கு வெளிநாட்டு நெருக்கடியை ஏற்படுத்த வல்லது. இது பற்றிச் சிங்கள அறிஞர்கள் சிந்தித்தார்களோ எனக்குத் தெரியாது.
 
குபேரன் என்ற பணக்காரன் இராவணன் என்ற அரசனுக்கு இலங்கையை அன்பளிப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அரசனான இராவணன் ஒரு தமிழன். இராமன் இராவணனை அழித்த பின் அவனது உறவுக்காரரையே ஆட்சியில் அமர்த்தினான். இப்படித்தான் தமிழர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.
 
பின்னொரு காலத்தில் விஜயன், குவேனி உட்பட 600 ஆட்கள் இந்தியாவில் இருந்து தென்னிலங்கையில் வந்து குடியேறியதாகவும். அவர்களே சிங்களவர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், சோழ மன்னர் ஆட்சியில் பௌத்தம் பரவிய வேளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் அது பரவியதாம். இவ்வாறே பௌத்தம் தழுவியோர் சிங்களத்தைப் பாவித்தமையால் பின்நாளில் அவர்கள் சிங்களவர் ஆயினர் என்றும் கூறப்படுகிறது.
 
என்னறிவுக்கெட்டியவரை இலங்கை தமிழருக்கு உரியது; சிங்களவர் பின்நாளில் வந்தேறு குடிகளாயினர். எனவே கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகள் பொய் என்கிறேன்.
 
புத்தர் ஓர் அரசன். திருமணமாகி ஆண் பிள்ளைக்கு அப்பா. அரச, இல்லற வாழ்வை விட்டொதுங்கி தனது பட்டறிவால் உலகுக்கு வழிகாட்டியவர். பௌத்தம் ஒரு மதமல்ல. புத்தரின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்ட மக்கள் குடும்பம். இவ்வுண்மை தெரியாத தேரர் எல்லாவெல அரசியலில் ஈடுபட்டால், புத்தருக்கு முந்திய தமிழரின் வரலாற்றை எப்படி அறிந்திருப்பர்.
 
இராணுவத்திலிருந்து ஓடித்தப்பி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய, மகிந்த ஆட்சியில் படைத்துறைச் செயலரான ஒழுக்கமற்றவருக்கு தமிழரின் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
என் உயிரிலும் மேலான தமிழறிஞர்களே! தமிழரின் தாயகம் இலங்கை என்றும் சிங்களவர் வந்தேறு குடிகள் என்றும் சான்றுப்படுத்தி உலக அரங்கில் முன்வைக்க வாருங்கள். இல்லையேல் எஞ்சியுள்ள ஈழத் தமிழரும் கடலில் குதித்து சாக நேரிடுமே!
 
கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகளைப் பொய்யெனச் சான்றுப்படுத்தாவிடின் சிங்களவரே, எஞ்சிய ஈழத் தமிழரைக் கடலில் குதிக்க வைத்துச் சாகவைப்பார்களே!
 
 

6 comments:

  1. தங்களின் இந்த பதிவின் மூலம் நிறைய விடயங்கள் அறியத்தந்தீர்கள் நன்றி நண்பரே....
    எனது புதிய பதிவு என் நூல் அகம் 3
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    தாங்கள் சொல்வது போல... மீண்டும் குருதி வெள்ளம் ஓடலாம்...எல்லாம் அரசியல் சாக்கடைகள்.. எல்லாம் இலாப நோக்கு. பகிர்வுக்கு நன்றி.த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. ஆம்! நல்ல தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு நண்பரெ!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.