Friday 21 November 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

18 comments:

  1. எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
    பேசும் கருத்தில் ஒற்றுமை
    பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
    செய்யும் செயலில் ஒற்றுமை
    செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
    எதற்கெடுத்தாலும்
    எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
    ஓருயிரும் ஈருடலும் என்பேன்!//

    சால சிறந்த கருத்து வரிகள்.

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அற்புதமான வாழ்க்கைத் தத்துவம் நண்பரே....

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான கவியில் அழகாய் ஓருயிரும் ஈருடலும் விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஓருடலும் ஈருயிரும் பற்றி நெருடலின்றி நீங்கள் சொன்ன விளக்கம் மிகச் சரியே !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. முடிவில் நல்லதொரு கேள்வி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
    பேசும் கருத்தில் ஒற்றுமை
    பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
    செய்யும் செயலில் ஒற்றுமை
    செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
    எதற்கெடுத்தாலும்
    எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
    ஓருயிரும் ஈருடலும் என்பேன்!//

    மிகச் சரியே! ஆனால் இது போல் உலகில் உண்டோ?
    முடிவில் ஒரு கேள்வி கேட்டீர்கள் பாருங்கள்! நல்ல கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. ஓருயிரும் ஈருடலும் அருமை அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  9. அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.