Tuesday 4 November 2014

ஆண்டவன் கணக்கில்...

வரவும் செலவும்
வருவாய்க் கணக்கில்
நட்பும் பிரிவும்
உறவுக் கணக்கில்
நல்லதும் கெட்டதும்
அறிவுக் கணக்கில்
தன்நலமும் பிறர்நலமும்
உணர்வுக் கணக்கில்
காதலும் தோல்வியும்
இளமைக் கணக்கில்
மகிழ்வும் துயரும்
வாழ்க்கைக் கணக்கில்
ஆயினும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கணக்கில்...
எத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!

8 comments:

  1. எத்தனையைச் சேர்த்தாலும்
    இறுதியில் எம்மை
    இறைவன் - தன்
    கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே! //

    உண்மை தான் ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. ஆயினும்
    பிறப்பும் இறப்பும்..இயற்கையின் கணக்கில் என்று எனக்கு தோன்றுகிறது..அய்யா..!!

    ReplyDelete
    Replies
    1. பிறப்பும் இறப்பும்...
      இயற்கையின் கணக்கில் என்று
      எனக்கு தோன்றுகிறது என்கிறீர்கள் - அந்த
      இயற்கையைப் படைத்தவரும்
      ஆண்டவரே / கடவுளே!

      Delete
  3. கடவுளை படைத்தது மனிதனா....? மனிதனை படைத்தது கடவளா...? என்ற முடிவில்லா விவாதம் வரும்..திரு. யாழ் அவர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. கடவுளைப் படைத்தது மனிதனா....? மனிதனைப் படைத்தது கடவளா...? என்ற முடிவில்லாக் கருத்துமோதல் தொடருவதை நானறிவேன்.
      முடிவு...?

      Delete
  4. ஆண்டவன் கணக்கில்...
    எத்தனை கணக்கில்
    எத்தனையைச் சேர்த்தாலும்
    இறுதியில் எம்மை
    இறைவன் - தன்
    கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!//

    அதுதானே யதார்த்தம்! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.