Friday 14 November 2014

நண்பர்களே! நண்பர்களே!

நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளலாமா?
தேர்வுகளிலும் போட்டிகளிலும்
படிப்பிலும் தொழிலும்
காதலிலும் வாழ்க்கையிலும்
வென்றவர்களுக்கு
கடவுள் வந்து உதவினாரா?
எம்மைப் படைத்த கடவுள் - ஒருபோதும்
எம்மை எட்டிப் பார்த்ததில்லையே!
எப்படி ஐயா
கண் முன்னே கண்ட எல்லோரும்
எதிலும் வெற்றி பெற முடிகிறது என்று
எண்ணிப் பார்ப்பதை விட
வெற்றி பெறத் தேவையானதை
எண்ணிப் பார்க்கலாமே!
விருப்பம் கொள்...
முயற்சி செய்...
பயற்சியைத் தொடரு...
"என்னால் முடியும்" என்று
தன்னம்பிக்கையுடன் இரு...
பிறரையோ பிறவற்றையோ
கணக்கில் எடுக்காது
உன் வழியை நீயே பார்...
கூப்பிடு தூரத்தில் தான் - உனக்காக
உன் வெற்றியே காத்திருக்கிறதே!
நம்பிக்கையைப் போர்க்கலனாக்கி
இவ்வுலகை வெல்லலாம்
இன்றே முன்னேறு...
வெற்றிகள் எல்லாம் - உன்
காலடியில் வந்து வீழுமே!
பிறரால் முடியுமென்றால்
என்னால் ஏன் முடியாதென
விடிய விடிய
உன்னையே நோவதை விட
உனக்குள்ளே
உறங்கிக்கொண்டிருக்கும்
புலமைகளைத் திறமைகளை
வெளியே கொண்டு வா - அவற்றை
வாங்கிக் கொள்ளத் தானே
இவ்வுலகமே காத்திருக்கின்றதே!
பறப்பதென்று - நீ
முடிவு செய்து விட்டால் - காற்றே
உனக்குச் சிறகாய் முளைக்க
உன் தன்னம்பிக்கையே
உனது வெற்றியின் இடத்துக்கே
உன்னைக் காவிச் செல்லுமே!
நண்பர்களே! நண்பர்களே!
நாளுக்கு நாள்
பின்னடைவுகளைக் கண்டு
நொந்து கொள்ளாமல்
முன்னேறும் எண்ணங்களை
ஒழுங்குபடுத்துங்களேன்...
உங்களை வெல்லக் கடவுளும்
உங்களுக்குக் கிட்ட நெருங்காரே!

10 comments:

  1. தன்னம்பிக்கையை ஊட்டிய நல்லகவிதை அருமை நண்பரே,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. உன் தன்னம்பிக்கையே
    உனது வெற்றியின் இடத்துக்கே
    உன்னைக் காவிச் செல்லுமே!
    நண்பர்களே! நண்பர்களே! //

    அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நாளுக்கு நாள்
    பின்னடைவுகளைக் கண்டு
    நொந்து கொள்ளாமல்
    முன்னேறும் எண்ணங்களை
    ஒழுங்குபடுத்துவோம..............

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. உன் தன்னம்பிக்கையே
    உனது வெற்றியின் இடத்துக்கே
    உன்னைக் காவிச் செல்லுமே!
    நண்பர்களே! நண்பர்களே!
    நாளுக்கு நாள்
    பின்னடைவுகளைக் கண்டு
    நொந்து கொள்ளாமல்
    முன்னேறும் எண்ணங்களை
    ஒழுங்குபடுத்துங்களேன்...//

    அருமையான வரிகள்! தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. முன்னேறும் எண்ணங்களை
    ஒழுங்குபடுத்துங்களேன்...
    உங்களை வெல்லக் கடவுளும்
    உங்களுக்குக் கிட்ட நெருங்காரே!
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.