Wednesday 27 August 2014

எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...

தமிழில் எழுதுறாங்கோ...
உலக மொழிகள் கலந்த
உப்பு, புளி, காரம் இல்லாத
கூட்டுக்கறி (சாம்பாரு) போல...
உயிர், மெய், உயிர்மெய் அற்ற
வெறும் எழுத்தாக எழுதுறாங்கோ...
நம்மாளுகளும் படிக்கிறாங்கோ...
படிச்ச பின் மறக்கிறாங்கோ...
உண்மைத் தமிழில் எழுதினால்
உண்ணாணத் தான்
எவர் தான் மறப்பாங்கோ...
எழுதுறாங்கோ...
எழுதுறாங்கோ - எவரும்
உண்மைத் தமிழ் அற்ற
உலக மொழிகளின் கலப்பாக
படித்தாலும் மறக்க இலகுவாக
எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...
உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
சொல்கள் உருவாக மாட்டாதே...
உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
படைப்புகள் உருவாக மாட்டாதே...
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கு
தமிழில் தீராக் காதல் - அது தான்
பிறமொழி கலந்து எழுதினால்
தமிழ் படைப்பல்ல என்கிறான்!

23 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் உண்மையும் கூட.. பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
    படைப்புகள் உருவாக மாட்டாதே...//

    உண்மையே. பிற மொழி கலக்காமல் எழுதுவதுதான் சிறப்பு!

    பிறமொழி கலந்து எழுதினால்
    தமிழ் படைப்பல்ல என்கிறான்!//

    எங்கள் எழுத்துக்களும் கூட சில சமயங்களில் அப்படித்தான் உள்ளது நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. உண்மைதான் கவிஞரே தாங்கள் சொல்வது 100க்கு100 உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையாக சொல்லியுள்ளீர்கள். என்னுடையதிலும் கூட அவ்வாறுதான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. //உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
    சொல்கள் உருவாக மாட்டாதே...
    உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
    படைப்புகள் உருவாக மாட்டாதே...///

    அருமை தங்கள் எதிர்பார்ப்பு அவசியமானது நியாயமானது
    முடிந்தவரை அழகு தமிழில் பேசுவோம் எழுதுவோம்

    ஆழ்ந்துள்ள ஏக்கம் அகலவழி செய்திட்டால்
    வீழ்ந்திடா தங்கள் தமிழ் !

    அருமை அருமை வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்துள்ள ஏக்கம் அகலவழி செய்திட்டால்
      வீழ்ந்திடா தெங்கள் தமிழ் !

      இவ்வாறு வந்திருக்க வேண்டும் கவனக்குறைவுக்கு வருந்துகிறேன் தட்டச்சில் நேரடியாவே கருத்திடுவதால் இந்த நிலை !

      Delete
    2. ஆழ்ந்துள்ள ஏக்கம் அகலவழி செய்திட்டால்
      வீழ்ந்திடா தெங்கள் தமிழ்!

      என்பதே என் எதிர்பார்ப்பு!

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. உண்மையை தான் உரைக்கிறீர்கள்.சகோ ஆனாலும் தங்கள் அளவுக்கு எனக்கு அறிவு போதாதே. அடடா எத்தனை பிழைகள் என்கவிதையிலும் இருக்குமோ தெரியவில்லையே.
    இவை எல்லாம் என் தளத்தில் காணவில்லை அதனால் இவைகளை தவற விட்டுவிட்டேன். நான் நினைத்தேன் உங்களை காணவில்லை, ஓய்வில் எங்கோ சென்று விட்டீர்கள் என்றல்லவா. ம்..ம்..ம்.. சரி இனி இதையும் தொடர்கிறேன். வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. எதிர்பாராமல் ஏற்படும் தவறுகளுக்குக் கடவுளும் மன்னிப்பார்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. தங்களின் அறிவுரைப் படியே நானும் நேற்றைய தலைப்பில் பூஜிக்கப் பட வேண்டியவர் என்பதை ,வணங்கப் பட வேண்டியவர் என மாற்றம் செய்தேன் ,அதிக பட்சம் கலப்பில்லாமல் எழுத வேண்டுமென்பதே என் எண்ணமும் !
    த ம வாக்குப் பெட்டியே இல்லையே ,நான் எப்படி வாக்கு அளிப்பது?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      தமிழ்மணம் பட்டை, பதிவின் மேலே இருக்கிறது.

      Delete
    2. தமிழ்மணம் பட்டை மட்டும்தானே உள்ளது ?வாக்கு போடும் பெட்டி இல்லையே ?அது இருந்தால் உங்கள் பதிவு இன்னும் பலரைச் சென்று சேர வசதியாய் இருக்குமே !ஆவனச் செய்யுங்கள் !

      Delete
    3. தற்போது இதுபற்றிய தெளிவு எனக்கு வந்துவிட்டது. அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  8. தமிழ் தெரியாத தமிழனை்ங்கோ...நானு....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் தெரியாத தமிழனாக
      நானும் தான்...
      ஏனெனில்
      தமிழெனும் கடலை நீந்திக் கடக்க
      நீண்ட நாள் செல்லுமே1

      Delete
  9. வணக்கம் ஐயா!

    சூழ்ந்த துயரம் தொலைந்திடச் செய்தாலே
    வாழ்ந்திடும் வண்ணத் தமிழ்!

    தங்கள் அரும்பணிக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  10. தங்கள் கருத்துகள் உண்மையே!
    கலப்பு தடுக்கவும் தவிர்க்கவும் படவேண்டும் என்ற தங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
    பகிர்வுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  11. உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
    சொல்கள் உருவாக மாட்டாதே...
    உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
    படைப்புகள் உருவாக மாட்டாதே

    அழகான ஆக்கம்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.