Tuesday 19 August 2014

புதிதாக என்ன பண்ணுவோம்?


விடிந்தால் புதிய நாள் - அன்று
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய நாளில்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன....
அப்படியாயின், எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆளமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய நாளில்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!

10 comments:

  1. புதிய நாளில்
    புதிதாக என்ன பண்ணுவோம்?
    எங்கள் உள்ளத்தில்
    நாள் தோறும்
    நல்லெண்ணங்களை விதைப்போம்
    நல்லனவெல்லாம் பெறுவோமே!//

    ஆம் நல்லன பெறுவோம்! அருமை நண்பரே!

    ReplyDelete
  2. செய்ய வேண்டியதை
    நன்மைக்கே செய்வோம்...

    அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    சரியாக சொன்னீங்கள்.அதுவும் தெளிவாக பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. http://athavannewscom.blogspot.com/

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் நண்பரே..
    எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. நமது உள்ளத்தில் நல்ல எண்ணங்களை ஏற்றிக் கொண்டாலும் சமூகம் இம்சையான தாக அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.