Tuesday 25 March 2014

எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல

மணநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
வெடிங் முடிய ரெஜிஸ்ரேசன் - பிறகு
ரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்
தனித் தனி இன்விற்றேசன் கிடையாது
ஓல் ஒவ் யூ கம் என்றாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
பிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
ஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,
போட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
இறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
டெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
தமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் - அதில்
தமிழ் தெரியாதவங்க நடித்தாங்க - அவங்க
பேசியதெல்லாம்
ஆங்கிலமாத் தான் இருந்திச்சு - அதால
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
நான் ஒண்ணும் படிக்காதவனுங்க - அதனாலே
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல - ஆயினும்
நானும் நாலு படித்திருந்தால் - அப்ப
எனக்கெல்லாம் விளங்கி இருக்குமே!

எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம்.

மேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்குக.

4 comments:

  1. தமிழ் மொழி மண்ணாகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மொழி பொன்னை விடப் பெறுமதியானது.
      நாம் தான் தமிழ் மொழிக்குள் பிற மொழியைக் கலக்கிறோம்.

      Delete
  2. வ (த) ளரும் தமிழ்! இதுதான்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.