Saturday 9 May 2015

யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்

வழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் "தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து) 

"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.

உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.

பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர். 

அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?

இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.



14 comments:

  1. இணைப்பிற்க்கு சென்று வந்தேன் நண்பரே வேதனையான காட்சி.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அவரின் தளத்திற்கு செல்கிறேன் சகோ

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பொதுவான தண்ணீர்ப்பஞ்சமென்றே நினைத்திருந்தேன்.
    அதன் பின்னணியில் இப்படி ஒரு செயற்கைக் கொடுமை இருப்பதை அறிந்து, மேலும் வேதனை அடைகிறேன். யாழ் அறிஞர் மதிசுதா அவர்களை நான் இதற்குமுன் அறியேன் எனினும் அந்தக் குறும்படம் என்னைப் பெரிதும் பாதித்தது. என் வலைப்பக்கத்தில் வெளியிட அவரும் கேட்டிருந்ததால் உடனே வெளியிட்டு நண்பர்களைப் பார்க்கக் கேட்டுக்கொண்டேன். அவருக்கு என் வணக்கம். உங்களுக்கு என் நன்றிகள் நண்பரே. விரைவில் இதற்குத் தீர்வு வர நீங்களும் முயலுங்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான குறும்படம் முன்னரே பார்த்துவிட்டேன் .மதிசுதா எப்போதும் சமூக சிந்தனையுடைவர் .பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்
    அண்ணா.

    உண்மைசம்பவத்தை உணர்த்தும் படம்.. நிச்சயம் இணைப்பின் வழி சென்று பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி த.ம1
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. வேதனையான காட்சி. மதிசுதா விற்கு வாழ்த்துக்கள், சமுக சிந்தனைமிக்க குறும்படம். தங்கள் பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. நாங்களும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தளத்தில் கண்டு படத்தையும் பார்த்தோம். அதன் பின்னணியில் இத்தனை ஒரு வேதனையா? அருமையான படம். நீங்கள் சொல்லித்தான் யாழில் இத்தகைய பிரச்சினை இருப்பது தெரிகின்றது. வாழ்த்துகள் யாழ் மசிசுதா அவர்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர்த் துயரம் நீங்க இறைவனை வேண்டுவோம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.