Saturday 16 May 2015

இப்படியும் எண்ணத் தோன்றுகிறதே!


கால ஓட்டத்தைக் கண்காணித்தால்
கடவுள் கூடப் பணமென்றால்
நம்ம வீட்டுப் பக்கம்
வருவார் போல எண்ணத் தோன்றுகிறதே!
அங்காடியில் பாரும்
"உறவுக்குப் பகை கடன்" என்று
எழுதித் தொங்க விட்டிருப்பதை...
என் அறிவுக்கு எட்டிய வரை
"பணம் உறவை முறிக்கும் மருந்து" என்று
நாளுக்கு நாள் எண்ணத் தோன்றுகிறதே!
படிப்பு, பள்ளித் தேர்வு என்றாலும்
பணம் தான் குறுக்கே வருகிறது என்றால்
காதல், மணவாழ்வு என
எதற்கெடுத்தாலும்
பணம் இருந்தால் சுகமென
விடிய விடிய எண்ணத் தோன்றுகிறதே!
நட்பு, உறவு என எதுவானாலும்
பணம் உள்ள வரை தான்
பின் தொடர்வோரைப் புரிந்தால்
பணம் இல்லை என்றால்
எல்லாமே இல்லை என்றாகிவிடுமென
தனித்து வாழ்கையில் எண்ணத் தோன்றுகிறதே!
ஊருக்கூர் வீட்டுக்கு வீடு
நம்மாளுகள் வாழ்வதைப் பார்த்தே
நானும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
தலையைப் போட்டு உடைத்தே
உளவியல் அறிஞரானது தான்
எனக்குக் கிடைத்த பரிசு என
இரவுத் தூக்கத்தில் எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், வருவாய் - நீ
தருவாய், தருவாய் என
எத்தனையோ எண்ணித் தானே
காத்திருந்து காத்திருந்து பழகினால்
கடைசியிலே 'பிரிவு' என்ற 'பரிசு' தானே
கண் முன்னே காதுக்கு எட்டியதும்
பணத்தின் வேலையென எண்ணத் தோன்றுகிறதே!
வருவாய், தருவாய் - நீ
உளதாய், தருவதாய் - நீ
அன்பைத் தருவதாய்க் கொடுப்பதாய்
பழகும் உறவல்லவா - நீயென
நாளும் பழகும் உறவுகளில்
நாலு பணம் குறுக்கே வராது
வாழ்வில் 'பிரிவு' என்றும் வராது
அன்பைக் கொடுத்து வாழ்வோரை
காணும் போதெல்லாம் எண்ணத் தோன்றுகிறதே!


20 comments:

  1. இன்று இவையெல்லாம் அருகிப்போனதைத் தாங்கள் அறியவில்லையா?
    பணம் மட்டும் தான் அத்துனையையும் மாற்றும் மாயக்கோல்,
    மாறாத மாயக்கோல்,
    கல்வி என்பதும், காதல் என்பதும்,
    உறவு என்பதும்
    இதன் பின்தான் என்பது என்றோ
    ஆரம்பித்த
    அட்சயப் பாத்திரமாகிப் போன பணம்,
    பிணத்தையும் எழுப்பும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து
      உண்மையும் தான்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. கவிதைச் சிந்தனை அருமை கவிஞரே!

    தொடருங்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பணம் பத்தும் செய்யும் என்று
    சும்மாவா சொன்னார்கள் சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான உளவியல் விடயங்கள் அருமையாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்
    பணம் பாதழம் வரை செல்லும் என்பார்கள்.. பணத்தை விட வாழ்க்கை முக்கியம்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. இல்லானை இல்லாள் வேண்டாள்
    ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் என்று சொல்லிவிட்டார்களே
    அப்போவே பணத்தை ஒட்டி தானே. அருமை அருமை வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. அருமையான எடுத்துக்காட்டு
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. நல்ல சிந்தனையுடைய கவிதை ஐயா. அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. பணமென்றால் பிணம்கூட வாய் பொளக்கும் என்பார்கள்.நான் பார்த்ததில்லை.. ஆனால் பணத்தால்சமூகம் அவ்வளவு கேவலமாய் பொய்க் கொண்டு இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. உண்மையும் தான்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  9. பணமென்றால் பிணமே வாய் திறக்குமே! நண்பா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  10. நல்ல கருத்து ! பணம் என்றால் பத்தும் பறக்கும்! மானம் உட்பட...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.