Thursday 21 May 2015

தீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்


புத்தர் வரலாறு + படம் : http://ta.wikipedia.org/s/58x

உலகுக்கு சிக்கல் சீனப் பௌத்தர்கள்
தமிழருக்குச் சிக்கல் இலங்கைப் பௌத்தர்கள்
புத்தர் வழிகாட்டலைப் பார்க்கும் முன்
புத்தரின் வாழ்வைப் பாரும்...
நாடு வேண்டாமென்றார்
அரச வாழ்வு வேண்டாமென்றார்
இல்லாள் (மனைவி) வேண்டாமென்றார்
அழகான ஆண்மகனை வேண்டாமென்றார்
அப்படியே
எத்தனையோ வேண்டாமென்ற
சித்தார்த்தன் தான் - தானே
புத்தராகித் தானுரைத்த 
பௌத்த வழிகாட்டலிலே
"விருப்புகளைத் (ஆசைகளைத்) தூக்கியெறிந்தால்
அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த
வாழ்க்கையை வாழலாம்!" என்று
வழிகாட்டியும் இருந்தார்! - அந்த
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றும்
சீன, இலங்கைப் பௌத்தர்களுக்கு
விருப்பங்கள் (ஆசைகள்) அதிகமாம்! - அதுவும்
பெண், பொன் விருப்பம் (ஆசை) இருப்பினும்
சீன - அயல் நாட்டு எல்லைச் சிக்கல்
சுட்டிக் காட்டுவதோ சீனப் பௌத்தர்களுக்கு
மண் விருப்பம் (ஆசை) இருப்பதையும்
இலங்கைப் போர்ச்சூழல் சுட்டிக் காட்டுவதோ
தமிழ்ப் பெண்கள் கற்புப் பறித்தல் 
(பெண் விருப்பம் (ஆசை))
தமிழர் பொன்கள் பொறுக்கி எடுத்தல்
(பொன் விருப்பம் (ஆசை))
தமிழர் மண்ணைத் தமதாக்க எத்தனித்தல்
(மண் விருப்பம் (ஆசை))
எல்லாம் இலங்கைப் பௌத்தர்களுக்கு இருப்பதையும்
உலகெங்கும் ஏற்றுக்கொண்ட உண்மையே!
விருப்புகளை (ஆசைகளை) விலக்கிவிட்டு வழிகாட்டிய
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சிங்களவரால்
இலங்கையில் தீர்வின்றி அமைதியின்மை தொடர
புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாத சீனர்களால்
சீன - அயல்நாட்டு எல்லைச் சிக்கல் தொடர
உலகப் போர் ஏற்பட வாய்ப்புண்டோ?

அறிஞர் பகவான்ஜி எழுதிய பாவினிலே
புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை என்கிறார்
நான் அதைப் படித்த வேகத்திலே 
நான் இப்படி எழுத முயன்றேன்!
என்னை இப்படி எழுதத் தூண்டிய
அறிஞர் பகவான்ஜி எழுதிய 'சிரி'கவிதை!
கீழ்வரும் இணைப்புகளில் இருந்தாலும் கூட
நானும் கீழே பதிகிறேன்; படியுங்கள்!

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை!

12 comments:

  1. அருமையான விளக்கவுரை கவிதை வாழ்த்துகள்
    பகவான்ஜியின் பதிவைப் படித்திருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான கருத்துக்கள். பாருங்கள் யார் என்ன சொன்னாலும் நாம் திருந்த மாட்டோம்.புத்தரின் வழிகாட்டலைப் பின்பற்றாதவர்கள் கொள்ளை என்ன இருக்கிறது.பௌத்த வழிகாட்டலிலே விருப்புகளைத் தூக்கியெறிந்தால்
    அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த உலகம் அமையும் எனும் உங்களின் அவா நிறைவேற வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பும்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. குறளுக்கு ஒரு பரிமேலழகர்போல் ,என் பதிவுக்கு. உரை சொன்ன உங்களுக்கு என் நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவுக்கு நான் உரை எழுதியதாக அமையாது.
      தங்கள் பதிவு இத்தனை உண்மைகளை வெளிப்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். அதனால், இவ்வாறு எழுத எண்ணினேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்
    உண்மைதான்.... புத்தர் அப்படி சொல்ல வில்லை மனிதன்தான் ஆசை பிடித்தவன்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. புத்தரை எங்கன்ட ஆட்களும் வழிபட்டிருக்கினம் ,படைப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் (http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_8469.html)
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. புத்தரோ, பௌத்தமோ சிறந்தவைதான். அதன் புனிதத்தைக் கெடுப்பவன் மனிதர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.