Monday 18 May 2015

ஆடைக்குறைப்பு அழகல்ல...


ஆள் வளர ஆடை குறைவதா?
ஆளும் வளர
அறிவு வளருமென்று பார்த்தால்
ஆடையைக் குறைக்கப் போய்
அறிவு மங்கியது தான் மிச்சமா?
இளசுகள் உடுத்தித் திரிவதைக் கண்டு
பெரிசுகள் உங்களை வெறுக்கிறாங்களே!

ஆண்களே! - உங்கள்
கீழ் சட்டை வழுகிக் கீழிறங்கலாமா?
பெண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
வழுகிக் கீழிறங்கும்
கீழ் சட்டையைப் பார்த்து...
பெண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

பெண்களே! - உங்கள்
மேல்-கீழ் சட்டைகள் குட்டையாகலாமா?
ஆண்கள் முகம் சுழிக்கிறாங்களே!
குட்டையான சட்டைக்கு
மேலும் கீழும் தெரிவதைக் கண்டு
ஆண்கள் உங்களை வெறுக்கிறாங்களே!

அழகு என்பது இதுவல்ல
அழகாக மூடி வைக்கப்பட்ட
ஒன்றின் மீது தான்
விருப்பம் மேலோங்குகிறது...
அது பற்றிச் சிந்திக்காமல்
இது தான் அழகென்று
இப்படிக் காட்டுவதால் என்ன பயன்?
இளசுகளே - எல்லோரும்
உங்களை வெறுக்கிறார்களே!

முடிவாக ஒன்று...
ஒரு வேளை கூட
ஒழுங்காகச் சாப்பிட முடியாதவர்கள் கூட
முழு ஆடை அணிந்து மின்ன
பணத்துக்கு மேல் படுக்கின்ற
சில முகங்களே
மேல் நாட்டு விருப்பில்
நம்ம பண்பாட்டை அழிக்கிறார்களே!

10 comments:

  1. அருமை நண்பரே அருமை இருபாலருக்கும் அருமையான சட்டையை குறித்து சரியான சாட்டையடி ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. மேல் நாட்டு மோகம் என்பது சரியா?
    அது அவரின் தட்ப்பவெப்ப நிலைக்கான உடை. நம்மின் உடைகள் நமக்கு சரியாக, ஆனால் நாம் எல்லாவற்றையும் விட்டு பறந்துக்கொண்டு, அதற்கு கேவலமான சாக்கு கற்பித்துக்கொண்டு,
    இருபாலருக்கும் நம் பாரம்பரிய உடையின் அழகு கண்டதில்லையா?
    சேலையும் வேட்டியும் சொல்லாத அழகா ஆடைக்குறைப்பில் உள்ளது. தாங்கள் சாடியது அருமை. வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பண்பாட்டைப் பேணத் தவறுவது ஆணா? பெண்ணா? எனப் பட்டிமன்றம் நடாத்த இயலாது. இருபாலருக்கும் சொன்னால் கூட தத்தம் செயலை மாற்றுவார்களோ தெரியாது. தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. போடு...போடுன்னு போட்டாலும்...அதுகளுக்கு புத்தி வருமுன்னு நிணைக்க முடியல....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. மேல்நாட்டவர் அணிந்தால் அது அவர்களது நாகரிகம். அது பார்ப்பதற்குத் தவறாகவும் தெரியவில்லை. ஆனால் நம்மவர் அணியும் போது அது சற்று நாகரீகமற்றதாகத்தான் தெரிகின்றது....இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது....

    நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. "இரு பாலாரும் பிறர் மரியாதை செய்யும் அளவு உடை அணிந்தால் போற்றுதற்குரியது..." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
      தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.
      மிக்க நன்றி.

      Delete
  5. ஆடைக்குறைப்பு மட்டுமா அழகல்ல..,நீங்களும் இப்படிப பட்ட படங்களைப் போடுவதுவும்தான் :).

    ReplyDelete
    Replies
    1. நானோ கூகிள், முகநூல் பக்கங்களில் பொறுக்கிய படங்களை வைத்து நாலு வரி எழுத முனைந்தேன் ஐயா! எப்படியோ இன்றைய இளசுகளின் போக்கு நாளைய உள்ளங்களில் நிலைத்துவிடாமல் பேணவே இவ்வாறான படங்களைப் போட்டுச் சில வரிகள் சிந்திக்க எழுதுகின்றேன்.

      தமிழ் மொழியைப் பேணுவதும் தமிழர் பண்பாட்டைப் பேணுவதும் அவரவர் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.