Sunday 3 May 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02


"2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது." என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி சென்ற பதிவைப் படிக்கவும்.
http://eluththugal.blogspot.com/2015/02/2015-01.html

இலங்கையில் கொழும்பிலிருந்து மிகின்லங்கா வானூர்தியில் புறப்பட்டு மதுரைக்குக் கிட்ட நெருங்கியதும் வானூர்தி தள்ளாடியது. அடடே! மதுரை வந்தாச்சோ எனத் தரையைப் பார்த்த வேளை மலை ஒன்று தென்பட்டது. மதுரையிலும் எத்தனை மலை இருக்கோ... மதுரைவாழ் உறவுகளைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என எண்ணியவேளை வானூர்தி தரையைத் தட்டியது.


நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களுடன் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் இருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேரூந்தைப் பிடித்தோம். அங்கிருந்து தைப்பூசப் பெருநாள், வள்ளலார் சிறப்பு நாள் என வடலூருக்குச் சென்றுவிடலாம் என்றுதான்... பேரூந்தில் ஏறியதும் தள்ளாடிய வானூர்தியில் இருந்து பார்த்த மலை தான் நினைவுக்கு வந்தது.




பேரூந்து நகர நகர நினைத்த மலை நேரில் பார்க்கக் கூடிய சூழலும் தென்பட்டது. "அந்த மலையைத்தான் வானிலிருந்து பார்த்தேன்" என்றது நண்பர் சுஷ்ரூவா பல ஒளிப்படங்களை எடுத்தார். நகர நகர அந்த மலையைத்தான் சுற்றிப் பேரூந்து நகர்ந்தது போல இருந்தது. அத்தனை ஒளிப்படங்களையும் இயங்குநிலைப் (Animation) படமாக மாற்றினேன். அதனைக் கீழே பார்க்கலாம்.


இயங்குநிலைப் (Animation) படத்தை வைத்து மதுரையில் நான் கண்ட மலையை அடையாளப்படுத்தி விட்டீர்களா? அந்த மலை பற்றிய தங்களுக்குத் தெரிந்த தகவலைப் பின்னூட்டமாகத் தாருங்களேன்.

மாட்டுத்தாவணியில் இறங்கி வடலூருக்குச் செல்லவும் வேறு பேருந்திலே ஏறியாச்சு! ஒருவாறு ஆறு ஏழு மணி நேரத்தில் வடலூருக்குச் சென்றாச்சு. அடுத்த நாள் வள்ளலார் நினைவு இடத்தில் தைப்பூசப் பெருநாள். அவ்விடத்தருகே தான் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் வீடும். அவரது வீட்டில் தான் ஓர் ஏழல் (வாரம்) தங்கியிருந்தேன்.

பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

15 comments:

  1. வணக்கம் நண்பரே இந்த மலை மதுரையை சேர்ந்த யானைமலை ஒத்தக்கடை என்ற ஊர் இதனைக்குறித்த பதிவு ஒன்றைக்கூட சமீபத்தில் திரு. கரந்தையார் அவர்கள் வெளியிட்டார்கள் 80 குறிப்பிடத்தக்கது
    தொடர்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெளித் தோற்றத்தை வைத்து என்னால் அடையாளப்படுத்த முடியாமையால் இப்பதிவில் எனது ஐயத்தை வெளிப்படுத்தினேன். ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html அதனைப் படித்தேன். அதனை நினைவூட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. ஒற்றைக் கல்லால் ஆனயானை மலைதான் அது ,இதன் சிறப்பைப் பற்றி அறிய ,கில்லர் ஜி கூறியுள்ள கரந்தை ஜெயகுமார் அவர்களின் பதிவை படித்து ரசியுங்கள் ,இதோ அந்த லிங்க் >>>http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post.html
    மதுரையின் சிறப்பு ,முப்புறமும் யானை மலை ,பசுமலை ,நாக மலை அமைந்துள்ளது !

    ReplyDelete
    Replies
    1. வெளித் தோற்றத்தை வைத்து என்னால் அடையாளப்படுத்த முடியாமையால் இப்பதிவில் எனது ஐயத்தை வெளிப்படுத்தினேன். ஆனை மலை பற்றி அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அதனைப் படித்தேன். அதனை நினைவூட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. நல்ல விடயம் தொடர்கிறேன் மிகுதியறிய.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம்

    தங்களின் பயணம் இனிதாக நிறைவடைந்துள்ளமை மகிழ்ச்சிதான் அந்த மலை பற்றி karanthaijayakumar.ஐயா பதிவில் சொல்லியுள்ளார் பாருங்கள். பகிர்வுக்கு நன்றி அழகிய படங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தங்களை கவர்ந்த ஆனைமலை கரந்தையார் எழுத்தில் கண்டீர்கள் போலும். பயணம் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  7. அன்புள்ள அய்யா,

    தாங்கள் மதுரை வந்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனைமலையைச் சுட்டது கண்டு இன்னும் மகிழ்ச்சி. கரந்தையார் சுட்டிய மலைதான் இந்த மலை. இயங்குரு படமாக காட்டியது அருமை.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  8. தொடரட்டும் உங்கள் பயண அனுபம் வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.