Sunday 12 April 2015

தொலைபேசித் தொல்லை

பணி (வேலை) நேரத்தில்
என்னைக் குழப்பியது
என் நடைபேசி வழியே
தொலைபேசி அழைப்பு ஒன்று!
தொலைபேசியும் தொல்லைபேசியுமென
அழைப்பை ஏற்ற வேளை
எதிர்முனையில் இருந்து
"ஐ லவ் யூ" என
இனிமையான பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"கூ இஸ் ஸ்பீக்கிங் தெஆர்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"நீங்கள் யார்?" என்றதும்
எதிர்முனையில் இருந்து
"மம ஒயாவ ஆதரே கரனவா" என
அதே பெண்ணின் குரல்...
பதிலுக்கு
"ஒயா கவுத?" என்றதும்
அழைப்புத் தூண்டிக்கப்பட்டு விட்டதே!
இலங்கைவாசி என்பதால்  - இந்த
மும்மொழியால தொல்லை
இந்தியத் தமிழகவாசி என்றால்
பதினெட்டு மொழியால - என்
காதைக் குடைந்திருப்பாளே என
என் பணியைத் (வேலையைத்) தொடர்ந்தேன்!
அழைப்பை முறிக்காமல்
தொடர்ந்திருந்தால் - என்
இல்லாள் (மனைவி) இடம் போய் - "உன்
கணவனைக் காதலிக்க இணங்குவீரா?" என்று
ஒப்புதல் (அனுமதி) பெற்றுவரச் சொல்லியிருப்பேன்!
ஓ! நண்பர்களே!
இப்படி எவராச்சும் கேட்டால்
"ஆற்றில் இறங்கினாலும்
ஆழமறிந்தே இறங்குவேன் - எந்த
ஆளோடும் நண்பரானாலும்
ஆளையறிந்தே பழகுவேன் - அந்த
மாதிரியான நான் - உன்னை
முழுமையாய் அறியாமலே
பதிலளிக்க முடியாதே!" என்பதே
உங்கள் பதிலாக இருகட்டுமே!
ஆணாகிய எனக்கு
பெண்ணொருத்தி - இப்படி
தொலைபேசித் தொல்லை
தந்தது போல
பெண்ணாகிய உங்களுக்கு
ஆணொருவன் - இப்படி
தொலைபேசித் தொல்லை தர
வாய்ப்புக் கிட்டினால்
உறைப்பான பதிலளிக்க
காத்திருங்கள் - ஏனென்று
எண்ணிப்பார்த்தீர்களா? - இந்த
தொலைபேசித் தொல்லை தருவோர் - இன்றைய
காளை, வாலை இரு பாலாரிலும்
இருக்கக்கூடும் என்பேன்!

28 comments:

  1. ஆஹா எனக்கு மட்டும் இந்த மா3 தொலைபேசிகள் வருவதில்லையே ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. நண்பரே தங்களுக்கு தமிழ் மண ஓட்டு போட முடியாதோ ?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எனக்கும் புரியல்ல

      Delete
  3. இதையா நீங்க தொல்லைன்னு சொல்றீங்க :)

    ReplyDelete
  4. இங்கும் இப்படி விளம்பர , கடன் வசதி தருகின்றோம் என்று வேலைநேரத்தில் அன்பாக கொல்லும் தொலைபேசித் தொல்லை அதிகம் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

  5. தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள் அனைவரும்
    குறிப்பறிந்து தங்களது தொடர்பு எல்லைக்குள்
    எல்லை மீறி வருவதன் ரகசியம் அறிய ஆவல் அய்யா!
    சிதம்பர ரகசியம் என்று சொல்லி விடாதீர்கள்§
    வாருங்கள் அய்யா எமது பதிவினை நோக்கி!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  6. வலையில் மாட்டவில்லை... நன்று...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  7. வணக்கம்

    எல்லாம் நல்லதாய் நடக்கட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  8. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  10. நல்ல புத்திமதி சகோதரா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  11. தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால்...எனக்கு தொல்லையே இல்லை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  12. அன்புள்ள அய்யா,

    வணக்கம். திருமிகு.யாழ்பாவாணன் என்கிற தாங்களும் & அய்யா ரூபன் அவர்களும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடத்தி உலகம் தழுவிய மாபெரும் சிறுதைப் போட்டி 2015-க்கான தாங்கள் அனுப்பிய சான்றிதழும் பரிசும் கிடைக்கப்படப் பெற்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -மிக்க நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  13. தொல்லைப்பேசி தங்களை மட்டும் தொலைப்பதன் ரகசியம் ஏனோ? சரி தங்கள் பதில் என்ன? தொடர்பு எல்லைக்கு அப்பால்,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  14. தொலை பேசிகள் தொல்லை பேசிகள் ஆயினதான்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.