Friday 13 February 2015

எனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 01

எனக்கும் தமிழக அறிஞர்களுக்கும் இடையே முதலில் உறவை ஏற்படுத்தித் தந்தது தமிழ்நண்பர்கள்.கொம் தளமே! 2015 மாசி தமிழகப் பயணத்திற்கு தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் சுஷ்ரூவா (கோ.தண்டாயுதபாணி) அவர்களின் ஒத்துழைப்பே எனக்கு ஊக்கமளித்தது. மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் நண்பர் சுஷ்ரூவா உடன் நான் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் கிழே தந்துள்ளேன்.

மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் அறிஞர் பகவான்ஜி உம் அறிஞர் வலிப்போக்கன் அவர்களும் என்னை வரவேற்க வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போனதையிட்டும் நண்பர் கில்லர்ஜி தெரிவித்ததும் எனக்குத் துயரம் தான். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது சந்திக்கலாம் என எம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியதாயிற்று.

எனது தமிழகப் பயணச் செய்தி படித்து வாழ்த்தும் வழிகாட்டலும் தந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. அறிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் நண்பர் சுஷ்ரூவாவுடன் கதைத்திருந்தார். அவரும் புலவர் இராமானுஜம் அவர்களும் மேலும் பலரும் சென்னைக்கு வருமாறு அழைப்புத் தந்தனர். பல பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த ஆண்டு தமிழகம் வரும் போது அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற எண்ணியுள்ளேன்.

எல்லோருடனும் இலகுவாகத் தொடர்புகொள்ளலாமென எண்ணி நடைபேசி இணைப்பைப் (Sim ஐப்) பெற்றிருந்தும் செயலுருப் (Activation) பெறமையால் பலருடன் தொடர்புகொண்டு சந்திப்புகளையும் உறவுகளையும் மேம்படுத்த முடியாமை தான் எனது துயரம்!

உண்மையில் இலங்கையிலே நடைபேசி இணைப்பு (Sim) இலவசமாகவும் செயலாக்கல் (Activation) ஓரிரு மணி நேரத்திலும் வழங்குகிறார்கள்.
அப்படியிருக்கையில் இந்தியாவில் மட்டும் பத்து நாட்கள் இழுபறி ஏன்?
இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திறன் போதாதா?
முகவர் நிறுவனங்களின் அக்கறையின்மையா?
என்னமோ... இந்தியாவில் தொலைத்தொடர்புச் செலவு (Call Charge) அதிகம் என்பதை நானறிவேன்.
பிறிதொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

10 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    தங்களின் பயணம் பற்றி தங்களின் பதிவு வழி அறிந்தேன்... சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்
    பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் அடுத்த பகுதியை
    த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. தங்களின் பயணம் வெற்றிகரமாய் அமைந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சந்திப்புகள் நமது உறவை வலுப்படுத்துமே!
      சந்திக்கும் நாள் வரை காத்திருப்போம்
      மிக்க நன்றி.

      Delete
  3. நிச்சயம் சந்திப்போம்:)

    ReplyDelete
    Replies
    1. சந்திப்புகள் நமது உறவை வலுப்படுத்துமே!
      சந்திக்கும் நாள் வரை காத்திருப்போம்
      மிக்க நன்றி.

      Delete
  4. தங்கள் பயணம் சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஆம் நண்பரே! தொலை தொடர்பு இந்தியாவில் ஏன் இப்படி என்று நாங்களும் எண்ணுகின்றோம்தான். தங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததது குறித்து மகிழ்ச்சி. அடுத்த முறை நாஅம் சந்திப்போம்....

    ReplyDelete
    Replies
    1. சந்திப்புகள் நமது உறவை வலுப்படுத்துமே!
      சந்திக்கும் நாள் வரை காத்திருப்போம்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.