Sunday 19 October 2014

நம்மாளுகளும் நம்மையாளும் கடவுளும்


வாழ்வை வழங்கிய கடவுள் பார்க்கிறான்
நம்மாளுகள் மகிழ்வாக வாழ்கிறாரா என்றுதான்...
கிடைத்த வாழ்வில் துயரைக் கண்டதும்
நம்மாளுகள் வாழ்வதைவிட சாகலாம் என்கிறார்களே!

வாழ்வை வழங்கிய கடவுளுக்குத் தெரியும்
துயரெனும் விலையைக் கொடுத்தே வாழணுமென்று...
துயருக்குப் பின்னும் மகிழ்வு உண்டென்று
நம்மாளுகளுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறதே!

வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ!

3 comments:

  1. ஓ..படைப்பில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா ?நல்ல சிந்தனை !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. வாழ்க்கையென்பது சும்மா மகிழ்வு தருமென்றால்
    படைப்புகள் இயங்காதெனக் கடவுளும் அறிவான்...
    கடவுளின் எண்ணத்தை அறியாத நம்மாளுகள்
    படைப்புகளைப் படைக்காதவரை படைப்பின் சுவையறிவரோ! // மிகவும் அருமையான வரிகள். நன்றி ஐயா

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.