Sunday 28 September 2014

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!


இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காளான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

12 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. கவிதையின் விரைவான நடை ரசிக்க வைக்கிறது

    (சிறு திருத்தம்; காழான் --> காளான்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      தாங்கள் சுட்டிய சிறு பிழையைப் பணிவோடு திருத்திக்கொண்டேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. நல்ல கற்பனை!
    இயல்பான சொற்பிரயோகங்கள்!
    மிக அருமை ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. கவிதை அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. புதுமையான கற்பனை நண்பரே..

    ReplyDelete
  6. ஆஹா... ரசிக்க வைத்த கவிதை...
    அருமை...

    ReplyDelete
  7. #நடைபேசி எப்படி இருந்தாலென்ன
    மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
    நடைபேசியாக இருந்தால்
    சரி#
    அவள் மட்டுமா அழகு ,அவள் கருத்தும் அழகு !

    ReplyDelete
  8. மிகவும் ரசித்தோம்! நண்பரே!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.