Friday 26 September 2014

ஆண்களே பதில் சொல்லுங்களேன்!


அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

8 comments:

  1. சாதி, மதம், பணம் எல்லாம் பார்த்து காதலிப்பது காதலா?
    காதலிக்கும் முன்னரே அவள்/அவன் ஏழை என்பதை இவர்கள் அறிவதில்லையா?
    மனம் பார்த்து காதலித்தால் அது உண்மையான காதல்... இதெல்லாம்....ம்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக் கணைகள் தவறான வழியில் செல்வோரைச் சுட்டுகொல்லும்!
      மிக்க நன்றி!

      Delete
  2. இப்படிப்பட்டவன் எதற்க்கு காதலிக்க ஆசைப்படுகிறான் ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக் கணைகள் தவறான வழியில் செல்வோரைச் சுட்டுகொல்லும்!
      மிக்க நன்றி!

      Delete
  3. வணக்கம்
    ஒரு பெண்னை ஒரு ஆண் காதலிப்பதும் ஒரு ஆண் ஒரு பெண்னை காதலிப்பதும் இயற்கையின் நியதி.. இருந்தாலும் வாழப் போவது காதலர்கள். சாதி என்ற பிரிவினையை தோற்றி வைத்தவன் மனிதன் ஆனால் இறைவன் உருவாக்கிய ஆண்சாதி பெண்சாதி என்ற இரண்டையும்.

    காதலித்த பின் இறுதி தறுவாயில் வேறு சிலரின் நண்மைக்காக விட்டுக் கொடுப்பது காதலனின் முட்டாள் தனமான வேலை.. எனவே யாருடைய பேச்சையும் கேட்காமல் சொந்த சுயபுத்தியில் வாழ்வது மேல் இதுவே எனது கருத்து.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இப்படிப்பட்டவன் எதற்க்கு காதலிக்க ஆசைப்படுகிறான் ?
    Vetha. Langathilakam.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக் கணைகள் தவறான வழியில் செல்வோரைச் சுட்டுகொல்லும்!
      மிக்க நன்றி!

      Delete
  5. காதல் என்பது புனிதமானது! அதை அறியாதவர்கள் காதலிப்பதற்கு அருகதை அற்றவர்கள்!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.