Saturday 7 September 2013

பாதணி (செருப்பு)


(மேலுள்ள படத்தைப் பார்த்ததும் எழுதியது)

”பாதணி” என்று
தலைப்பிட்ட போது தான்
சடையப்ப வள்ளல் வளர்த்த
வான்மீகியின் இராமாயணத்தை
கற்பனை அலை வீசும் கடலாக
இராமனின் பாதணியை வைத்து
பரதன் அண்ணன்
அயோத்தியை ஆண்ட கதையை
சுந்தரத் தமிழில்
காவியமாய்ப் பாடி முடித்த
கம்பரை மீட்டுப் பார்த்தே
கா(பனை)வோலைக் கால்களை
வெட்டிப் பாதணி போட்டவர்களும்
குளிர்பானக் குடுவையை (போத்தலை)
தட்டையாக்கிப் பாதணி போட்டவர்களும்
நினைவில் வர - அவை
நம்ம ஈழ மண்ணில் நிகழ்ந்த
போரினால் ஏற்பட்ட வடுவாக
மறக்க முடியவில்லைக் காணும்
எனது அருமை உறவுகளே!
புதுப் பாதணி கடிக்கும் என்பது
நாம் படித்த பழமொழி
கடிக்கும் பாதணி உடனே
கல்லும் முள்ளும் குத்தும்
கால்களுடன் நடைபோட்ட
ஈழத்து உறவுகளை
எம்மொழியில் படித்தேனும்
உலகம் கண்டும் உதவவில்லையே!

4 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    கவிதை அருமை ஒருகனம் மனதை திருப்பிப் போட்டது என்னதான் செய்வது.....வாழ்த்துக்கள்

    தீபாவளியை முன்னிட்டு கவிதைப் போட்டி நடைபெற உள்ளது பார்வைக்கு எனது தளத்தில் உள்ளது.
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      கவிதைப் போட்டி பற்றி நண்பர் திண்டுக்கல் தனபாலனின் வலைப்பூவிலும் படித்தேன்.
      நன்றி.

      Delete
  2. சிங்கள அரசு செய்யும் காலனி ஆதிக்கத்தை காலணி மூலமும் வெளிப்படுத்தி விதம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரையை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.