முல்லைப் பெரியாற்று அணையாலே
ஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான
கேரளாக்காரரும் தமிழகக்காரரும்
முட்டி மோதுவது முறையல்லவே!
ஆனாலும்
கேரளாக்காரரின் ஒற்றுமை
தமிழகக்காரிடம் இல்லையே
அதனாலன்றோ
தமிழகத்திற்கு கேடு வருகின்றது!
தமிழகக் கட்சிகள் ஒவ்வொன்றும்
தனித் தனி நாள் குறித்து
கேரளாவை எதிர்க்க முனைவது
தமிழருக்கு
விடிவைப் பெற்றுத்தரவல்ல
தங்களை அடையாளப்படுத்தவே!
ஓர் இனம் ஒரு வேண்டுகோள்
என்றிருக்கும் போது
ஏன் எல்லோரும்
தனித் தனியாகப் போராட வேண்டும்?
கேரளாவை வென்றது
நாங்கள் தான் என்று பரணி பாடவா?
அப்படியாயின்
கேரளாவல்லவா வெல்லும்...
எப்படியாயினும்
ஒரு இலக்குக் குறித்து
தமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்?
அதெல்லாம்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணம் அல்லவா!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் இருந்தமையும்
பண்டாரவன்னியனுக்கு
ஒரு காக்கைவன்னியன் இருந்தமையும்
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு
(கரிகாலனுக்கு)
ஒரு விநாயகமூர்த்தி முரளீதரன்
(கருணா அம்மான்) இருந்தமையும்
இன்று(12/12/2011)
தமிழகக் கட்சிகள்
தனித் தனியே களமிறங்குவதும்
அன்று(20/05/2009 இற்கு முன்)
நாற்பத்தெட்டுப் போராளிக் குழுக்கள்
தமிழீழம் மீட்கக் களமிறங்கியதும்
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மைக்குச் சான்றல்லவா!
புலம் பெயர் நாடுகளிலும் கூட
கீரியும் பாம்பும் போல
தமிழர் தமக்குள்ளே
முட்டி மோதுவதைப் பார்த்து
மேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா?
இனி
தமிழருக்குள் ஒற்றுமை இல்லையென்றால்
உலகில்
எந்த நாட்டில் இருந்தாலும்
எதிலும் வெற்றி கிட்டாமல்
அழிவது தான் எஞ்சும்!
உலகிலிருந்து
தமிழினம் அழியாமல் பேண
வழித்தோன்றல் வழிவந்த
தமிழரின் குணமான
ஒற்றுமையின்மையைச் சாகவைத்து
ஒரு இலக்கிற்கு எப்போதும்
உலகத் தமிழினமே
ஒற்றுமையாக இணையக் கற்றுக்கொள்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே! தமிழர் ஒன்றுபடப் போவது எப்போதோ!? நல்ல பதிவு!
ReplyDeleteதமிழ்நாட்டிலும் சரி
Deleteஈழத்திலும் சரி
எந்தவொரு
புலம்பெயர் நாட்டிலும் சரி
தமிழர் ஒன்றுபட வேண்டும்!
எந்த இலக்குக் குறித்தும்
தமிழர் ஒன்றுபட்டு
ஒரே குரலாகப் போராடி வெல்ல
புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதே
என் விருப்பம்!
உண்மைதான் தாங்கள் சொல்வது தமிழர் ஒற்றுமை பெற்றாலே கிடைக்கும்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
முற்றிலும் உண்மை.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஒரே தாய் வயிற்றுப்பிள்ளைகளாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்றுதானே நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன..
ReplyDeleteஆயினும்
Deleteஒற்றுமை தானே தமிழரின் முழுப் பலம்!
மிக்க நன்றி.