Showing posts with label குறும்பா (குறும்புக் கவிதை). Show all posts
Showing posts with label குறும்பா (குறும்புக் கவிதை). Show all posts

Saturday, 16 May 2015

தெருவெளிக் குழந்தைகள்

காதல் எனும் தேர்வெழுதப் போய்
அழகு(காமம்) எனும் பெறுபேறு கிடைக்க
அழகில்(காமத்தில்) விருப்பம் மேலோங்க
காதல் நெருக்கம் துணைநிற்க முடிந்தது
"தெருவெளியில் வீசப்படும் குழந்தைகள்!"

Sunday, 19 October 2014

சொல்லுக் கேட்பதாயில்லை...

படிச்சுப் படிச்சுச் சொல்லி வைச்சாலும்
பிள்ளைகள் சொல்லுக் கேட்பதாயில்லை...
பட்டுக் கெட்டு நொந்த பின்னே
அம்மா, அப்பா என்றழுகையில் தெரிகிறதே...
"பிறர் பேச்சுக்கும் பெறுமதி உண்டென்றே!"

Sunday, 27 July 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

Thursday, 24 July 2014

ஒன்றுமே நடக்காத இரவு

முதலிரவு அன்று முட்டி முட்டியே
கொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க
ஆளாள் களையாது காலம் கரைய
விடிந்த பின்னரே தெரிய வந்தது
"எதுவும் நிகழாத முதலிரவு!"

Wednesday, 16 July 2014

இரு பொருளில் ஒரு சொல்

அன்று பள்ளியில் படித்தவங்க கண்டாங்க
கணக்கில பிழை வேண்டினேன்
இன்று வீட்டிற்கு வந்தால் பார்க்கலாம்
இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
"முன்னேற்றம்!"

*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.

Thursday, 3 July 2014

பெண்ணு பிடிக்க


பையனுக்குப் பெண்ணு பிடிக்கலையாமோ
பையனுக்குப் பிடித்த வீடும் காரும்
நெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்
மல்லுக்கட்டாமல் முன்வைத்துப் பாரும்
"பெண்ணு பிடிச்சிருக்கு என்பான்!"

மருத்துவமனையில்...

மருத்துவர்கள் எல்லோரும்
வருவாயில் குறியாய் இருக்காங்கோ...
நோயாளிகள் எல்லோரும்
மருத்துவரில் குறியாய் இருக்காங்கோ...
"நோய் குணமாகுமா?"

Saturday, 31 May 2014

கன்னியின் நிலை காண்பீரே!


ஆளும் பெரியவளாக மாறியும்
அறிவும் பெரிதாக மாறாமலும்
எவரையும் ஈர்க்கும் அழகு
எவரொருவர் பின்னோட உதவ
"ஓடியவள் செய்தி பாழாம்!"

வயசுக் கோளாறு வந்திச்சா
வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
பருவக் கோளாறு பத்திச்சா
அறிவுப் பையோ வத்திச்சா
"மணமுடிக்க முன் கருவுற..."

அகவை வந்த பின்னே
ஆணோடு பழகப் போய்
பெண்ணவள் மதியிழக்கப் பாரும்
வயிற்றினில் மூன்றாமாள் கருவுற
"ஈற்றினில் சாவை ஏற்றாளே!"

Saturday, 15 March 2014

இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்...

அழகான பிள்ளை, அறிவுள்ள அழகி,
ஆளோ மருத்துவர், எடுப்பான பெண்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ வெள்ளை உள்ளமோ சுத்தம்
"மணமகனுக்கோ ஐயமாம்..."

அழகான பொடியன், அறிவுள்ள பொடியன்,
ஆளோ மருத்துவர், எடுப்பான பொடியன்
சொத்துகள் ஏராளம் பணமோ தாராளம்
ஆளோ சிவலை உள்ளமோ சுத்தம்
"மணமகளுக்கோ ஐயமாம்..."

இரவு வேலையால உறவு முறியுமாம்
எவரைச் சொல்லி எவரை நோவது
ஐயம் தான் இருக்கும் வரை
நம்பிக்கை தான் மலரவும் மாட்டாதே
"இணைப்பாளருக்கு (தரகருக்கு) உழைப்பில்லையாம்..."

குறிப்பு: இந்நிலை மருத்துவருக்கு மட்டுமல்ல, தாதியருக்கும் இவர்களைப் போன்று இரவு வேலையாள்களுக்கும் பொருந்துமென இணைப்பாளர் (தரகர்) சொல்கிறார்.

Thursday, 13 February 2014

தேவை


பருவம் தப்பிய மழை
உருவம் இன்றிய உண்மை
தண்ணீரின் அருமை புரிந்திட
கண்ணீரின் வலிமை கூறுமே
"தேவை தண்ணீர்ச் சேமிப்பு!"

Saturday, 28 December 2013

தெருக்கடை உணவு

உண்டது நாறின மீனோ செத்த கோழியோ
நேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்
இன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்
மருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே
"கடையுணவு தந்த கேடு!"

ஞாயிற்றை நாடும் பூ

காலையில கிழக்கைப் பார்த்த பூ
மாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன?
ஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ
ஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்
"மஞ்சள் சூரியகாந்தி!"

Friday, 20 December 2013

ஏட்டிக்குப் போட்டி - 02

குருட்டு முத்தம் குடுத்துக் காட்டுறாள்
கிட்ட நெருங்கினால் கையைக் குலுக்கிறாள்
விடுதிக்கு வாங்க என்று இழுக்கிறாள்
உண்டு முடிய ஓடியே மறையிறாள்
"காளையவன் கடையிலே உழுந்தாட்டுறான்..."

ஏளையவள் எப்பன் அவனை நம்பினாள்
காளையவன் அவளிடம் காதல் செய்தான்
வாழ்நாள் துணையென அவளுமொத்து உழைத்தாள்
நாட்களோட அவளுடலும் குழந்தையைச் சுமக்கிறதே
"தேடினால் ஐந்து பிள்ளைக்கு அப்பனவன்..."

ஏட்டிக்குப் போட்டி - 01

ஏழடி மன்னன் காலடி வைத்தானங்கே
மூக்குமுட்ட நல்லாய்க் குடித்தும் இருப்பான்
வெளியே வந்ததும் வழிநடுவே வீழ்ந்தான்
உடைநழுவிக் குடிமணமும் காற்றோடு பறந்தன
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

ஆறடி உயரம் சேற்று நிறமாள்
பூச்சுத் தண்ணீர் பூசியதால் நாறுமுடல்
அணிந்த ஆடையோ அரையும் குறையும்
கேட்டுப் பாரேன் தான் தமிழிச்சியாம்
"தமிழர் பண்பாடும் காற்றிலே..."

Friday, 18 October 2013

தேர்தல் காலங்களில்...

கரும்பு தின்னக் கூலியா வேணும்!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேணும்!
உண்மையை ஏற்றுக் கொள்ள வேணும்!
ஒன்றை மட்டும் அறிய வேணும்!
"வாக்குகளை விற்காது இருக்கணும்!"

Sunday, 14 July 2013

நான் சாவடைந்தால் நால்வர் வேண்டும்!

நல்ல உறவுக்கு எள்ளையும் பங்கிட்டு உண்
வெல்ல முயன்றால் பயின்று பழகிக் கொள்
நாலு நட்புக்கு நல்ல அன்பு வேண்டும்
சுடலைக்கு நடைபோட நாலு நட்பு வேண்டும்
"உன்னை நீ அறி"

Thursday, 16 May 2013

உடன்படாத உள்ளங்கள்


பெற்றவர்கள் சோதிடத்தில் தாலிவளம் பார்க்க
கண்டதே காதல் கொண்டதே கோலமெனப் பிள்ளைகள்
ஊரொன்று கூடிக்குவிய மணநாள் நல்வேளையில்
மணமகள் மாற்றானுடன் ஓட்டமெனச் செய்தி பரவுகிறது
"தேட்டமில்லாத தேடும் உறவுகள்..."

Sunday, 28 April 2013

வாய்க்குள்ளேயே வாழ்க்கையா?


ஆண்பிள்ளை வீட்டார் கேட்கின்ற பெறுவனவால்
பெண்பிள்ளை வீட்டார் வெட்டென்று வீழ்கின்றனர்!
பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை கரைசேரவாம்
ஆணைப் பெற்றவர்கள் கிள்ள வருவாயாம்
"
எந்தப் பிள்ளை சாவதற்கு...?"