Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, 20 June 2015

உங்களுக்கு மூளை வேலை செய்கிறதா?


ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யும்?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மனிதனுக்கு
         வயிறு கடிக்கும் போது தான்...

ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
         மூக்குமுட்ட உண்ட மனிதன்
         நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
         இல்லையென்றால் பாரும்
         மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
         தன்நிலை இழந்து
         தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
         இல்லையென்றால் பாரும்
         கள்ளக் களவாக
         காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...

Saturday, 14 March 2015

எனக்குக் காதல் வரவில்லை!

1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!

2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!

Saturday, 15 November 2014

அழகும் பத்திரிகையும்


முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
 
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
 
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
 
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!

Tuesday, 2 September 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!

Wednesday, 30 July 2014

நாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா?

சம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே!

சாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...

Saturday, 12 July 2014

பேரூந்து போய் விட்டதா?

தோழர்-01: என்ன காணும்! வருகை பிந்திப் போய் விட்டதே!

தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!

கோவில் உள்ளே என்ன மோதல்?

ஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...?

இருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...!

சும்மா அலைய ஏலுமே!

பாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...

தேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...

Tuesday, 1 July 2014

சிலையில் எழுத்து

ஒருவர் : "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பாங்களே!

மற்றவர் : எந்தச் சிலையிலயங்கோ...

Monday, 9 June 2014

கூழுக்கும் விருப்பம்(ஆசை) மீசைக்கும் விருப்பம்(ஆசை)

சவப்பெட்டிக் கடைக்காரர் : கடவுளே! கொஞ்ச நாளாக வணிகம் இடம்பெற மாட்டேங்குது. எங்கட ஆட்களிடையே போரை மூட்டி விடப்பா...

கடவுள் : போரை மூட்டினால் என்னைக் கொல்லுவாங்களே! எனக்கு வேண்டாமப்பா இந்த வேலை...

Wednesday, 4 June 2014

பணமிருந்தும்...

ஒருவர் : நீங்கள் எப்படி?

மற்றவர் : பில்கேட்ஸ் போல பணக்காரன்!

முதலாமவர் : பில்கேட்ஸ் போல பொதுமக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது செய்கிறீர்களா?

இரண்டாமவர் : இல்லையே...

படிச்சும்...

ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?

மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...

முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?

இரண்டாமவர் : இல்லையே...

கறுப்புத் தலை

ஒருவர் : என்னண்ணே! மீசை, தாடி நரைச்சும் தலை கறுப்பாய் இருக்கே...

மற்றவர் : முகத்துக்கு மை பூச மறந்திட்டேன்... அதைக்கூடக் காட்டிக் கொடுக்கிறியே...

Sunday, 25 May 2014

இணையத்தில் நல்ல வருமானம்

ஒருவர் : இணையத்தில் வருவாய் கிட்டுமென Credit Card கணக்கால பத்து டொலர் வெட்டினால் பரவாயில்லை எனப் பதிவு செய்திட்டேனே...

மற்றவர் : அட முட்டாளே! இப்ப உன்னுடைய பணம் முழுவதும் வெட்டி எடுத்து முடிச்சிடுவாங்களே!

Monday, 19 May 2014

பசித்தாலும் காதல் தான்

ஒருவர் : பசிக்குதடா... சாப்பிட உதவேன்டா?

மற்றவர் : அழகுப் பெண்கள் அல்ல, அசட்டுப் பெண்கள் போகும் வழியில் நின்றால் காதல் செய்வதாய் நடித்துத் தேனீர்க் கடைக்கு இழுத்துச் சென்றால், அவர்களே வேண்டித் தருவாங்களே...

Friday, 16 May 2014

கணக்கில என்ன பிணக்கு?


ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?

மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...

ஆசிரியர் : ஒரே வகையில் ஒன்றுக்கு நூறு கணக்குகளை வாசிச்சுச் செய்து பார்த்திட்டுப் போயிருந்தால், வந்த புதுக் கணக்குகளைச் செய்திருக்கலாமே...

மாணவர் : வாசிக்க முடியுது, செய்ய முடியேல்லையே...

Tuesday, 13 May 2014

கடத்தல் கமுக்கம்

தோழி 1: அடிக்கடி பிள்ளைத்தாச்சி ஆகிறாய்... அடிக்கடி பிள்ளை பெற்றுக் கொள்கிறாய்... இரண்டு பிள்ளைக்கு இடையே மூன்று ஆண்டு இடைவெளி வேண்டுமடி...

தோழி 2: அடியே! அடிக்கடி பிள்ளை பெற நான் இன்னும் இடிஅமீனைக் கட்டவே இல்லையடி! நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தங்கம் கடத்தவே பிள்ளைத்தாச்சி ஆகிறேன்.

மறக்கமுடியவில்லையே!


முதலாமாள்: உங்களால் மறக்க முடியாதது எது?

இரண்டாமாள்: "காசில்லாதவனுக்கு எல்லாம் காதல் வருகுதோ" என்ற கேட்ட பெண்ணை.

முதலாமாள்: உங்கட பாதிப்பின் வெளிப்பாடு! யார் அந்தப் பெண்?

இரண்டாமாள்: வேறு யார்? அப்பன், ஆத்தாள் பேசிச் செய்து வைத்த பெண்; என் இல்லாளே!



Saturday, 10 May 2014

கண்ணாடி

ஒருவர் : மூக்குக் கண்ணாடியை ஏன் தலையில மாட்டுறாங்க?

மற்றவர் : கண் பார்க்காட்டிலும் தலைமுடி பார்க்குமென்று தான்...

பறக்கும் பணம்

ஒருவர் : என்னங்க... பணத் தாள்களைப் பறக்க விடுகிறியளே...

மற்றவர் : தேர்தலுக்காக அல்ல, கறுப்புப் பணம் பிடிபட்டிடும் என்பதற்கல்ல, "காசேதான் கடவுளடா" எனும் படத்திற்காக... எல்லாம் நிழற்படி(photo copy) எடுத்ததே