நம்ம ஊரில பொன்னையரும் பொன்னம்மாவும் தான் பழசுகள். பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான். இருவரது இளமைக்கும் பனம் பண்டங்கள் தான் காரணமென ஊரார் சொல்லிக்கொள்வர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, பொன்னையருக்குப் பொழுது போகவில்லை. "எடியே பொன்னி, அந்தப் பனம் பாத்தியைக் கிளறட்டோ..." என பொன்னையரும் இல்லாளைக் கேட்டார். "இந்தச் சனியன் இஞ்ச நின்றால் தொல்லை" என்று "ஓமோம் போய்க் கிண்டுங்கோ" என்று பொன்னம்மாவும் பொன்னையரைக் கலைத்தாள்.
பொன்னையரைக் கலைத்த பொன்னம்மா அடுப்பில என்ன பண்ணுறாள். பொன்னையருக்கு அதை அறிய வேணும் போலிருந்தது. இஞ்சாரும் பொன்னம்மா... எனக்குக் கொஞ்சம் பாலைத் தண்ணியைத் தாவேன். பொன்னையரும் பொன்னம்மாவுக்கு தொல்லை கொடுத்தார்.
இஞ்சாரும்... இந்தப் பச்சைத் தண்ணியைக் குடியுங்கோ... பொன்னம்மா மூக்குப்பேணியை நீட்டினாள். "எடியே... நான் கேட்டது பால்த் தண்ணியெல்லோ... ஏனடி பச்சைத் தண்ணியை நீட்டுறாய்..." என்று பொன்னையரும் பொங்கினார்.
தண்ணியைத் தாவென்று கத்திப்போட்டுப் பாலைக் கேட்கிறியே!
பாலைத் தண்ணியைத் தாவென்றெல்லோ கேட்டேன்!
எனக்குத் தண்ணி தான் காதில விழுந்தது!
அடுப்பில என்னடி வேலை? பாலை ஊற்றிக் கொண்டு வா!
"இந்தச் சனியனோட காலம் தள்ள ஏலாதெனக் குமுறிக்கொண்டு, அடுப்பில உழுத்தங் கழி கிண்ட போறேன்; அதற்குள்ளே பாலை ஊற்றெண்டு தொல்லை தாறியள்..." என்று அடுத்த அடுப்பில கிடந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள் பொன்னம்மா.
உழுத்தங் கழி கிண்டித் தாறவளிட்ட தேவையில்லாமல் தொல்லை கொடுத்திட்டேனென உழுத்தங் கழிச் சுவை நாவூறப் பாலைக் குடிச்சதும் பனங் கிழங்கு கிண்டப் பறந்தார் பொன்னையர்.
எப்படித் தான் எரிந்து விழுந்தாலும் பொன்னம்மாவுக்குப் பொன்னையரில அதிக பற்றுத் தான். பனங் கிழங்கு கிண்டிக் களைத்துப் போவாரென எண்ணி "உழுத்தங் கழி ஆறப் போவுது, எப்பன் சுறுக்காய் வாவென்" என்று கூப்பிட்டாள்.
உழுத்தங் கழிச் சுவையில அப்படியே கிண்டிய கிழங்கை அள்ளிக்கொண்டு பொன்னையரும் திரும்பினார். கிழங்கை உரித்துப் போட்டு அவிச்சுப் போடெனச் சொல்லிப் போட்டு உழுத்தங் கழி உண்ட களைப்பில எப்பன் சரிந்தார் (படுத்தார்).
கிடந்தவர் எழும்பினால் சுள்ளெண்டு கொதிப்பரெனப் பொன்னம்மாவும் கிழங்கை அவிச்சுப் போட்டு ஆறியிருந்தாள். ஒருவாறு பொன்னையரும் எழும்ப அவிச்ச கிழங்கை நீட்டினாள். பொன்னையருக்கு எப்பன் மகிழ்ச்சி! "உப்பு மிளகைப் பொடி பண்ணியாவேன்" என்று அன்பாச் சொன்னார்.
பொன்னம்மா அடுப்புப் பக்கமாய்க் கிடந்த நாலு செத்தமிளகாய் இரண்டு உப்புக் கட்டி எடுத்து உரலில போட்டு இடிச்சுக் கொடுத்தாள். சம்பல் தூளாகக் கிடந்த மிளகாய்ப் பொடியை நீட்டினாள்.
என்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள்! அதைத் தான் செய்தேன்! அது தான் சிவப்பு!" என்று பொன்னம்மா சொல்ல, "அதடி... உப்பும் மிளகும் எடி... போய்ப் பொடி பண்ணியாடி..." என்று பொன்னையர் விரட்ட "உப்பு மிளகுப் பொடி" உடன் அவர் முன்னே பொன்னம்மா வந்து நின்றாள்.
ஒரு பனங்கிழங்கை எடுத்தார்... இரு பாதி ஆக்கினார்... தும்பைத் தவத்திக் கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் வைத்துத் தொட்டுத் தின்றார் பொன்னையர். இஞ்சாரும் நீங்களும் தின்று பாரும்... உப்பு மிளகுப் பொடியில தொட்டுத் தின்னேக்க பனம் கிழங்கு நல்ல சுவையாக இருக்குதே!
விடிகாலை ஐந்துக்கு எழும்பினதும் பத்து மணிவரை படுத்தாத பாட்டைப் படுத்திப் போட்டு, பனங்கிழங்கைத் தின்னென்று அன்பாக உருகிறியள் எனப் பொன்னம்மா சீறினாள். "குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்!
(யாவும் கற்பனை)
இது போன்று நீங்களும் கதைகள் புனையலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறுக.
கதைகள் புனையலாம் வாருங்கள்!
http://wp.me/pTOfc-aP
வணக்கம்
ReplyDeleteகதை மிக அருமையாக நகர்த்தியுள்ளீர்கள்
((((என்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள்! அதைத் தான் செய்தேன்! ....)))
நகைச்சுவை கற்பனை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான்.
ReplyDeleteகாளையும்-வாலையும் நீடூழி வாழ்க...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நகைச்சுவையுடன், சிறிதானாலும் சுவையும் காரமும் குறையாத கடுகுக் கதை !
ReplyDeleteநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்!
ReplyDeleteஅழகான ஹாசியக் கதை...!
நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ரசிக்க வைக்கும் கதை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களின் மற்றொரு தளத்தில் (http://yarlpavanan.wordpress.com/2014/07/13/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/) என்னால் கருத்துரை இடவே முடிவதில்லை... g+மூலமும்...
ReplyDeleteசிறிது அமைப்பை (wordpress command settings) மாற்றுங்களேன்...
அமைப்பை (wordpress command settings) மாற்றிவிட்டேன். தங்கள் மதியுரைக்கு மிக்க நன்றி
Deleteமுதுமையிலும் குறையாத அன்பின் வெளிப்பாடுதான் அவ்வப்பொழுதைய ஊடல்களும், அதையொட்டிய சமாதானங்களும். நமக்கும் ஒருநாள் அவர்களின் வயது வருமல்லவா? சுவையான எழுத்து, நண்பரே!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்ல கதை நண்பரே! வயதானாலும் மோதலும், சமாதானம் செய்தலும் குடும்ப வாழ்க்கை இப்படித்தான் என்று கடுகை நன்றாக வெடிக்க வைத்துச் சுவைபட சொல்லியுள்ளீர்கள் நண்பரே!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.