உறவுகளுக்குள்ளே
எத்தனையோ மாற்றங்கள்
நிகழவைக்க
ஒரு சொல் போதுமே!
ஒரு சொல்லில் தான்
உறவுகளே முறிகின்றன...
முறிந்த உறவுகளை இணைக்க
எத்தனையோ சொல் இருந்தும்
பயனில்லையே!
சுடுசொல் வெளிப்பட்டதும்
தேடிப்போய்
உறவைத் தானே முறிக்கிறது...
பொய்ச்சொல் வெளிப்பட்டதும்
கண்முன்னே
மெய்யான காதலையும் பிரிக்கிறதே...
பிழைச்சொல் வெளிப்பட்டதும்
மொழி புரியாமல்
பகையைத் தூண்டி விடுகிறதே...
நம்பாச்சொல் வெளிப்பட்டதும்
எங்களை
மக்களும் ஒதுக்கிவிட முடிகிறதே...
நாக்கும் மேல் வாயும்
மூக்கை முட்டுமாப் போல
மோதி வெளிப்படுத்தும்
சொல்லின் வலிமை
எழுத்தில் எழுத முடியாததே!
ஒரு சொல் தானே
உயிரிழப்பை ஏற்படுத்தவோ...
உறவுகளை முறிக்கவோ...
துணை போகின்றதே!
நரம்பு இல்லாத நாக்கால
நறுக்கென்று சொன்ன
ஒரு சொல் போதுமே
உன்னை அடக்க...
மறந்துவிடாதே
சட்டெனச் சொல்லாத
சொல்லில் தான் - நீயும்
தலை நிமிர்ந்து நடை போடுகிறாயே!
சொல்லாமலும் இருக்கேலாது
சொல்லித் தான் ஆகணும் என்றால்
மணித்துளி நேரம்
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்
பின் விரும்பியதைச் சொல்லுங்களேன்!
நெல்லைக் கொட்டினால் அள்ளி விடலாம் ,சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்று சும்மாவா சொன்னார்கள் ?
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அருமை ஐயா...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
சொல்லின் வலிமை பெரிது...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
சிறப்பான பதிவு!
ReplyDeleteஆம்! முத்துக்கள் சிதறினால் எப்படிப் பொறுக்குவது கஷ்டமோ...ஆனால் அது கூடப் பொறுக்கி விடலாம்.... அது போலத்தான் என்றாலும் சொற்களைச் சிதறி விட்டம்டால் பின்னர் அதை மீண்டு எடுப்பது மிகவும் கஷ்டம்.....முறிந்த உறவை ஒட்ட வைத்தாலும் அது கீறல் இருக்கத்தான் இருக்கும்.....மறைமுகமாகவாவது......
உறவு முறியாமல் இருக்க ஒரே சொல் போதும்....அன்பு!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
"சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை யறிந்து" - என்பதைக் கவிதையாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அருமையான பா ஆக்கம். பல பக்க எழுத்துக்களைவிட ஒரு சொல் வலிமை வாய்ந்தது. பகிர்விற்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.