Wednesday, 23 July 2014

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

குறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.

11 comments:

  1. வணக்கம்
    காலம் ஒரு நாள் பதில் சொல்லும்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் கதையிது.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஓவியம் வாங்கப் போய்...
    கண்கள் போன கதையானது..!

    வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. என்ன ஐயா இங்கு நடக்குது?! கல்விக்குக் கூலி கற்பா? அட்டூழியம்! மிகவும் கொடுமை! மனதை என்னவோ செய்கின்றது! சமீபத்தில் பங்களூரில் ஒரு சிறிய குழந்தை பள்ளியில் பலாத்காரத்திற்கு உட்பட்டதே! கொடுமையிலும் கொடுமை! நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் எனப்து தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. கல்விக்கென ஒரு கடவுள் இருக்கிறாரே ,அவர்தான் இந்த கொடுமையைக் கேட்கணும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. இந்த மாதிரியான ஆசிரியர்கள்களை ஆண்உறுப்பை வெட்ட சட்டம் கொண்டு வரவேண்டும், அப்பொழுதுதான் அடுத்தவன் செய்யமாட்டான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.