Thursday, 17 July 2014

வயிறு பற்றி எரியுதையா...

அரசுக்கு வருவாய் இன்மையால்
எடுத்த எடுப்பிலே
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டி
வருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே!
என் பால்குடிப் பிள்ளை அழும்போது
மனைவி கேட்கிறாள்
"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே
பிள்ளைக்குப் பால்மா வேண்டி வா" என்று
பச்சையாகக் கேட்கையிலே
என்
வயிறு பற்றி எரியுதையா
எடுக்கிற சம்பளம் போதாமையாலே!
அட கணக்குப்பிள்ளோய்...
நாங்களும் மக்கள் தானுங்க...
அரசுக்குப் பசிக்குது என்றால்
வருவாயைப் கூட்டுறாங்களே...
எங்கட பசிக்குச் சாப்பிட
எங்கட சம்பள அதிகரிப்பை
அரசு போட்ட கணக்கில
சேர்க்காமல் விட்டால்
எங்கட வயிற்றை
எப்படி வளர்க்கிறதப்பா?
பிச்சைக்காரர் கூட
"அரசு
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டுது
நீங்க மட்டும்
தேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்
எப்படீங்க
நாங்க பால் கோப்பி குடிப்போம்?" என்று
எங்களுக்குத் தொல்லை தாறாங்களே!

11 comments:

  1. வணக்கம்
    அனுபவத்தின் வெளிப்பாடுகவியாக பிறந்த விதம் கண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    த.ம1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. திருப்தியும் ஒரு சிறந்த மருந்து...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. புதிய மொந்தை ! பழைய கள்ளு! அவ்வளவு தான் நண்பரே!

    ReplyDelete
  4. அனுபவத்தை கவிதையாய்... அதுவே மருந்தாய்... தந்தாய்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. வலியில் பிறந்த கவிதை..ஆழமாக...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. விலைவாசி ஏற்றத்தால் விளைந்த வயிற்று எரிச்சலை அனுபவப் பாடமாய் வடித்துள்ளீர்....என்ன செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.