Tuesday, 22 July 2014

களவும் கற்று மற

வகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.

ஆசிரியர் : "களவும் கற்று மற" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...

ஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி!

மாணவர் - 02 : ஐயா! நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்!

ஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.

இப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா? எனக்கோ ஐயம் தான்!

8 comments:

  1. மாணவன் வகுப்பில் தண்டனையாக அதிக நேரம் இருக்க வேண்டியிருந்தாலும் ஆசிரியரால் இருக்க முடியாது ,ஏன்னா ,அவர் டியூசன் எடுக்க போக வேண்டி இருக்குமே !

    ReplyDelete
    Replies

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. காதலுக்கான கால அளவு.
    “களவும் கற்று மற“என்பதற்கு திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் பின் அதனை மறந்துவிடவேண்டும் எனப் பொதுவாகப் பொருள் வழங்கிவருகின்றனர். சரியான பொருள் காதலிப்பதற்கும் கால அளவுண்டு என்பதுவே..
    ஆம்..
    களவாகிய காதல் 2மாத காலம் தான் நிகழும் என,
    “களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
    திங்கள் இரண்டின் அகமென மொழிப“
    இறையனார் களவியல் உரைக்கிறது.
    காதலித்துக்கொண்டே இருந்துவிடக் கூடாது காதல் திருமணமாக மாறவேண்டும் என்பதே நம் முன்னோர் வகுத்த மரபாகும்.

    http://www.gunathamizh.com/2011/04/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. களவும் கற்று மற என்பதற்கு இவ்வாறான விளக்கம் இருக்கு என்று இப்ப தான் அறிந்தேன். தங்கள்
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
    2. அழகான விளக்கம் முனைவர் ஐயா! கற்றுக் கொண்டோம்!

      Delete
  3. இப்போதுள்ள மாணவர்கள் தண்டனை எல்லாம் ஏற்பதில்லை! நண்பரே!

    ReplyDelete
  4. வணக்கம்
    நல்ல கற்பனை ... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.