தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
26/10/2014 ஞாயிறு அன்று தானாம்...
யாழ்பாவாணனாகிய நான் கூட
ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்று
கலந்து கொள்ள முடியாத போதும்
இனிதே தமிழ்ப் பதிவர் சந்திப்பு
நிகழ வேண்டுமென விநாயகரை வேண்டி
வாழ்த்துக் கூற விரும்புகிறேன்!
வெளிநாட்டுப் பதிவர்களையும் அழைத்து
தமிழகத்துப் பதிவர்களும் இணைந்து
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலே
தமிழ்ப் பதிவர் சந்திப்பு நடந்தேற
துணைநிற்கும் எல்லோருக்கும் வாழ்த்து!
எழுத்தாலே இணைந்தோம்
அறிவாலே பழகினோம்
கருத்துப்பகிர்வாலே கட்டுண்டோம்
பதிவர் சந்திப்பாலே உறவைப் பலப்படுத்த
மதுரைக்கு வருகை தரும்
தமிழ்ப் பதிவர்களுக்கு வாழ்த்து!
ஆளறிமுகம் அன்புப் பகிர்வு
கேளாயோ உள்ளத்து எண்ணம்
பாராயோ பதிவர் வெளியீடுகள்
பெருகுதே உறவுப் பாலமென
தமிழ்ப் பதிவர் சந்திப்புப் பயன்தர
தமிழ் எங்கும் சிறக்க வாழ்த்து!
கூகிளும் வேர்ட்பிரஸும்
தமிழ்மணமும் துணைநின்றாலும்
தமிழைப் பேண முனைப்புற்று எழுந்த
தமிழில் எழுத விருப்புற்றுக் குதித்த
உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண
வலைப்பூ நடாத்தி வரும் பதிவர்கள்
பதிவர் சந்திப்பில் மகிழ்வோடு வெற்றிகாண
ஈழத்தில் இருந்து - உங்கள்
யாழ்பாவாணன் வாழ்த்துகிறேன்!
Thank you
ReplyDeleteFrom MADURAI
பதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
Deleteதங்களின் வாழ்த்தக்களுக்கு நன்றி!
ReplyDeleteபதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
Deleteஆஹா மிக்க நன்றி சார்...நீங்களும் கலந்து கொண்டால் கூடுதல் சிறப்பாக இருக்கும்..
ReplyDeleteஅடுத்த ஆண்டு முயற்சி செய்கிறேன்.
Deleteபதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி !வர முடியவில்லை வருந்த வேண்டாம் ,விழா நிகழ்ச்சிகள் யாவும் இணையத்தில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்தாகி விட்டது,,கண்டு ,கேட்டு மகிழுங்கள்
ReplyDeleteதங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
Deleteபதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
வாழ்த்துக்கள் சிறப்பாக நடந்து முடிந்தது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.