Friday, 24 October 2014
கடவுள் அழுகின்றான்...!
அழகான உலகில்
நானும் நீங்களும்
கடவளின் வடிவமைப்பே!
நமக்கிடையே நிகழ்வதெல்லாம்
நாமே
வடிவமைத்தது என்பேன்!
உலகம் அழிவதற்கும்
நாம்
நம்மை அழிப்பதற்கும்
கடவுளின் திருவிளையாடல் அல்ல...
நமது செயற்பாடுகளே!
அழிகின்ற உலகையும்
அடிபட்டுச் சாகும் உயிர்களையும்
வானிலிருந்து பார்த்தவாறே
உலகையும் உயிர்களையும் படைத்த
கடவுள் அழுகின்றான்...!
படைப்பது
என் தொழில் என்றால்
அழிப்பதும் அழிவதும்
நம்மவர் தொழில் என்றா
கடவுள் அழுகின்றான்...!
நான் பிறந்தேன்
நான் வாழ்ந்தேன்
என்றில்லாமல்
நம்மைப் படைத்த
கடவுளைக் கூட
எப்பன் எண்ணிப் பார்த்தாலென்ன!
Subscribe to:
Post Comments (Atom)
ஆம்! கடவுள் நம் நிகழ்வுகளுக்குக் காரணம் அல்லர்! நல்ல பதிவு!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
கடவுளே இல்லாத போது , கடவுள் எப்படி அழுகின்றான்..??
ReplyDeleteமனிதன் கடவுளாக எண்ணியதால்
Deleteகடவுள் கூட
ஒளிந்து இருக்கிறார் போலும்!
நல்ல கவிதை ஐயா
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
கடவுளை வைத்து நாம் படும்பாடு கொஞ்சமல்ல..பாவம் கடவுள் ...பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.