Saturday, 29 March 2014

ஒளி தரும் நிலவே!


படைத்தல் (பிரமனின்) தொழிலுக்கு
நீ
இடையூறு செய்வதாகக் கூறி
படைத்தலுக்குப் பொறுப்பானவரே (பிரமனே)
ஆனைமுகனை நாடி நிற்க
ஆனைமுகனோ - உன்னை
அமாவாசையின் பின்னே
வளர்பிறையாகவும்
பூரணையின் (பௌர்ணமியின்) பின்னே
தேய்பிறையாகவும்
ஆகுமாறு ஆக்கினாரென அறிந்தேனே!
பாவலர்கள் (கவிஞர்கள்) - உன்னை
எப்போதுமே
பெண்ணாக ஒப்பிட்டே
பா புனைகின்றனரே - உன்
அழகை மறைக்கவே
வானம் என்ற சேலையை
உடுத்தி இருக்கிறாயென
ஊரெல்லாம் பேசுறாங்களே!
வளர்பிறையாகி
மூன்றாம் பிறையாகி
அரை நிலவாகி
முழு நிலவாகி - அந்த
ஞாயிற்று ஒளியை வாங்கி
நமக்கு ஒளி தரும் நிலவே - உன்னை
என்னால் மறக்க முடியவில்லையே!

6 comments:

  1. வித்தியாசமான சிந்தனை
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

      Delete
  2. நிலவை புதிய கோணத்திலிருந்து இரசிக்கும் கவிதையை நன் இரசித்தேன்! பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

      Delete
  3. வித்தியாசமான ரசனைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.