மணநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
வெடிங் முடிய ரெஜிஸ்ரேசன் - பிறகு
ரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்
தனித் தனி இன்விற்றேசன் கிடையாது
ஓல் ஒவ் யூ கம் என்றாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
பிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
ஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,
போட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
இறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்
டெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
தமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் - அதில்
தமிழ் தெரியாதவங்க நடித்தாங்க - அவங்க
பேசியதெல்லாம்
ஆங்கிலமாத் தான் இருந்திச்சு - அதால
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல...
நான் ஒண்ணும் படிக்காதவனுங்க - அதனாலே
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல - ஆயினும்
நானும் நாலு படித்திருந்தால் - அப்ப
எனக்கெல்லாம் விளங்கி இருக்குமே!
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம்.
மேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்குக.
தமிழ் மொழி மண்ணாகி விட்டது...
ReplyDeleteதமிழ் மொழி பொன்னை விடப் பெறுமதியானது.
Deleteநாம் தான் தமிழ் மொழிக்குள் பிற மொழியைக் கலக்கிறோம்.
வ (த) ளரும் தமிழ்! இதுதான்!
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Delete