Saturday, 5 October 2013

செய்தியும் விளம்பரமும்


ஈருளி (மிதிவண்டி/ bicyle) ஓட்டிகளை
தெருவெங்கும் காண்பது அரிது
ஏனென்று எண்ணிப்பார்க்கையிலே
விரைவாக வேலைக்குப் போகவே
உந்துருளி (Motorbike) ஓட்டக்காரர் மலிவு
ஆனால்,
அரசுக்குத் தான் வருவாய்
அப்படியிருப்பினும்
விபத்துகளில் சிக்கியோர் சாவு!



உந்துருளி (Discovery) ஒன்றிற்கான
தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றிலே
"இது ஓடாது; பறக்கும்" என
உறைப்பான வரியிலே (Dead Line) சொல்லி
நமக்கு விருப்பேற்றி
உந்துருளியை வேண்டு வேண்டென
விளம்பரம் செய்யக் கண்டேன்!

வருவாய்க்காகக் கத்திய
விளம்பரதாரர் பேச்சை நம்பி வேண்டிய
உந்துருளியை ஓடும் போது
"இது ஓடாதே; பறக்கிறதே" என
நம்மாளுகளும் ஓடுவதனாலேயே
மோதல்களும் (Accident) சாவுகளும் (Die)
நாட்டிலே மலிந்து போயிற்றே!



முதன்நிலைச் செய்தி ஏடு ஒன்றிலே
முற்பக்கச் செய்தீயாக
"பல்சர் (Pulsar) பறந்தது; உயிர் பிரிந்தது" என
போட்ட தலைப்பின் கீழே
"ஒருவர் சாவு - அடுத்தவர்
நிலைமை கவலைக்கிடம்" என
போடப்பட்டிருந்த செய்தியே
நாட்டு நடப்பாயிற்றே!


2 comments:

  1. பல்சர் பறந்தது ;உயிரும் பறந்தது ...என்றல்லவா தலைப்பு போட்டிருக்க வேண்டும் ?

    ReplyDelete
    Replies
    1. விளம்பரத்தின் விளைவு விபத்து
      விபத்தின் விளைவு செய்தி
      "செய்தியும் விளம்பரமும் தலைப்பாயிற்று"

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.