விடிகாலை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து
அரப்பு, எலுமிச்சை அவித்துத் தோய்ந்து
மஞ்சள் அப்பிக் கோடி(புத்தாடை) உடுத்துத் தொடங்கிய
தீபாவளியைப் பற்றி எவருக்கு என்ன தெரியும்?
தீபம் + ஆவளி(வரிசை) = தீபாவளி என்றால்
வரிசையாகத் தீபம்(ஒளி) ஏற்றல் என்றாலும்
நம்முள்ளத்து இருள் அகலவே
இறையருள் கிடைக்கக் கொண்டாடும் நாளே!
அடடே! கொஞ்சம் எண்ணிப்பாரு...
தீபத் திருநாளில் இறையருள் கிடைக்குமா?
கிடைக்குமடா கிடைக்கும் நம்பு - நீ
உனது கெட்ட செயலில் ஒன்றையாவது
தீபாவளியன்று உன்னிலிருந்து அகற்றினாலே!
எண்ணைக் குளியலோட சனியன் போயிற்றா?
இல்லையென்றே வெடி கொழுத்துகிறாய்...
வெடி வெடித்துச் சிதறுவது போல
உள்ளத்தில் வேரூன்றிய கெட்ட எண்ணங்களை
எட்ட விரட்டினால் சனியன் ஓடிடுமே!
இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் சமய வழக்காகவும்
ஏனையோர் பண்பாட்டு வழக்காகவும் தானாம்
நன்நாளெனத் தீபாவளியைக் கொண்டாடுகிறாங்களே!
தீபாவளியில் தீபம்(ஒளி) ஏற்றிப் பயனில்லை
ஒளி காட்டும் வழியென எண்ணி - அன்று
என்றும் நல்லவராக வாழ்வோமென உறுதியெடு!
//தீபத் திருநாளில் இறையருள் கிடைக்குமா?
ReplyDeleteகிடைக்குமடா கிடைக்கும் நம்பு - நீ
உனது கெட்ட செயலில் ஒன்றையாவது
தீபாவளியன்று உன்னிலிருந்து அகற்றினாலே!//
அருமையான கருத்துக்கள். பாராட்டுக்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கு முதல் வணக்கம்.
Deleteதங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஉங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக சந்தோசமாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி.
Deleteஒழுக்கத்துடன் நல்லவராக வாழ்வதை உணர்த்தும் வரிகள் சிறப்புங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஒளி காட்டும் வழி =அருமை..!
ReplyDeleteமிக்க நன்றி!
Delete''..ஒளி காட்டும் வழியென எண்ணி - அன்று
ReplyDeleteஎன்றும் நல்லவராக வாழ்வோமென உறுதியெடு! ..''
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.
மிக்க நன்றி.
Delete