Saturday, 5 October 2013

நம்மாளுகளைப் பார்த்து ஒழியும் கடவுள்...


பள்ளியில் கற்றது
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
நம்மாளுகள் சொல்வது
"அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்"
கண் கண்ட சான்றுகள்
"பிள்ளைகள் தம் பெற்றோரை
முதியோர் இல்லங்களில் ஒப்படைத்தல்"
அடிக்கடி நினைவில் தோன்றுவது
"காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது"
"முதுமையிலும் இளமை" இல்லத்தில்
பிள்ளைகள் தம் பெற்றோரை ஒப்படைக்கையிலே
"எங்களை - இங்கு
தள்ளி விட்ட குற்றத்திற்கு
உங்கட பிள்ளைகள்
உங்களுக்கு ஒறுப்புத் தந்தனரோ" என
பழம் பழசுகள் சொல்லிச் சிரித்தனர்!
இந்நிகழ்வுகளையோ
இந்நிலைமைகளையோ
பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
எல்லோரையும் படைத்த ஆண்டவரே
மறைந்து நின்று பார்க்கிறார் போலும்!

6 comments:

  1. வணக்கம்
    இந்நிகழ்வுகளையோ
    இந்நிலைமைகளையோ
    பார்த்தால் அழவேண்டி வருமென அஞ்சித்தான்
    எல்லோரையும் படைத்த ஆண்டவரே
    மறைந்து நின்று பார்க்கிறார் போலும்

    உண்மைதான் கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  2. காலம் செய்த கோலம் ...குழந்தைகளை பெற்றோர்கள் காப்பகத்தில் சேர்ப்பதும் ,பெற்றோர்களை குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பதும் !

    ReplyDelete
    Replies
    1. எப்ப தான் இந்நிலை மாறுமோ
      எப்பனும் எனக்குப் புரியவில்லையே!

      Delete
  3. வருத்தமான சங்கதிதான்

    ReplyDelete
    Replies
    1. நம்ம சூழலில் சில துயரங்கள் தொடர்வதை நிறுத்த முடியவில்லையே!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.