Friday, 29 May 2015

கண்கள் பேசும் மொழி கூட...



கண்களால் காண்க
கண்டதில் நல்லது எதுவென்றே
கண்களால் கண்ணுற்ற
கண்டதெல்லாம் வழி காட்டுமே
கண்களால் வழிந்தோடும்
கண்ணீரும் கூட மருந்தாகுமே
கண்களால் இணையர்கள் தேடுவதும்
கண்கள் தான் தாம் களிப்புறவே
கண்கள் வழியே தான்
கண்ணுற்ற காதலர்களும் - அவரவர்
உள்ளத்தில் நுழைகின்றனரே
உள்ளதைச் சொன்னால் - உண்மையில்
கண்களின் பெறுமதியை எவரறிவார்?
அறிவார் தம் நலன் மட்டுமே
அறியார் கண்ணற்றவர் நிலையையே
பாட்டெழுதும் பாவலரின்
பாட்டின் பாடுபொருளும் கண்ணாகுமே
ஒன்பது வாசல் எம்முடலில்
ஒன்றாம் வாசல் கண்ணாகுமே
கண்கள் பேசும் மொழி கூட
கண்கள் தான் அறியுமாமே
கண்கள் வழியே நுழைந்தவை தான்
எண்ணங்கள் தோன்றத் துணையாமே
எண்ணிப் பார்த்தீர்களா
கண்ணில்லாதவன் எண்ணத்தில்
எண்ணற்ற துயரப் புண்களையே?
கண்ணொன்றைக் கொடுங்கள்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை
கண்ணின்றித் தானடைந்த துயரை
எண்ணி எண்ணி எடுத்துச் சொல்வரே!
நல்ல கண்ணுள்ளவர்களே - நீங்கள்
மெல்லச் சாவடைந்தால் - உங்கள்
கண்களை உரித்தே - பிறர்
கண்ணில் ஒட்டிக்கொள்ள உதவுங்களேன்
கண்ணின்றித் துயருற்றவர்
கண்ணுள்ளவன் அடைந்த மகிழ்வை அடையத்தானே!

குறிப்பு:- கண் மாற்றுச் சிகிச்சை என்பது சாவடைந்து சில மணி நேரத்துக்குள்ளே சாவடைந்தவர் கண்ணில் விழிவெண்படலத்தை உரித்து பார்வை இழந்தவர் கண்ணில் ஒட்டிவிடுதலே! கண் கொடை(தானம்) என்பது ஒருவர் சாவடைந்ததும் தனது கண்ணை பிறருக்கு இவ்வாறு வழங்க உடன்படுதல் ஆகும்.

17 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. கண்களைக்குறித்த கவி அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. ஓ!..சிறப்பு!...சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. நன்மை பயக்கும் நல் கவிதை வடித்தீர்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. தங்களின் கவி அருமை. அதனின் சொன்ன கருத்து அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. அந்தக் கண்கள் அதே கண்கள்தான்... கவிதை அருமை......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரரே.

    தங்களின் கண்கள் கவிதை அருமை. ௬டவே கண் தானத்தின் சிறப்பை பற்றிய பகிர்வும் அருமை. ஒரு மனிதனின் வாழ்வில்தான் கண்கள் எவ்வளவு முக்கியம். எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்.

    என் தளம் வந்து கருத்துக்கள் ௬றுவதற்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. தமிழை விரும்பும் ஒவ்வொருவரையும்
    தமிழைப் பரப்பும் ஒவ்வொருவரையும்
    தமிழே அடையாளப்படுத்தும் - என்னையும்
    குழல் இன்னிசை! ஈர்த்தது என்றால் - அந்த
    தமிழை தாங்கள் வெளிப்படுத்தும் அழகு தான்!
    தொடருங்கள் உங்கள் பணி - நம்
    ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!
    வலை வழி தமிழ் பேணும்
    தங்களுக்கு எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. அருமை அருமையான கண்ணான கண்ணின் மணியான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.