Wednesday, 20 May 2015

அழும் முகங்களும் துயர் முகங்களுமாக



எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
தண்ணீர் தண்ணீராகக் கொட்டும்
கண்ணீர் கண்ணீராக வடிக்கும்
பெண்ணென்ன ஆணென்ன
மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே
வாழும் போது காண்கிறேன் - நாளும்
எத்தனையோ துயரைப் பாரும் உறவுகளே!
யாரும் வாழ்வில் மகிழ்வடைந்தால்
வெளிப்பட்டு வராது - ஆனால்
வழி நெடுக நான் காணும்
எவர் முகத்திலும் துயரே தெரிகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தேன்
நம்மாளுகள் உள்ளத்திலே
மகிழ்வு வந்து போகிறதே தவிர
துயரம் தான் குந்தி விடுகிறதே!
இன்றைய மகிழ்வைக் கூட
நாளைக்கு வைத்துச் சுவைக்க இடமின்றி
நேற்றைய, முந்திய துயரல்லவா
என்றும் வந்து தடுத்து விடுகிறதே!
எண்ணி எண்ணிப் பார்த்தால்
நம்மாளுகள் தங்கள் உள்ளத்திலே
துயரைச் சுமக்கத் தெரிந்தது போல
மகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே
அழும் முகங்களும் துயர் முகங்களுமாக
நம்முன்னே உலாவுகின்றனரே!



9 comments:

  1. மகிழ்வை மிஞ்சிய துயரென்றால் இளகு
    மனம் மகிழாதே
    தலைப்பாரம் இறக்கும் மனிதன் மனப்பாரம்
    இறக்க அறிக்தானாய் இல்லை,
    எனவே,துயரங்களே இங்கு தொடர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அறிந்தானாய் இல்லை,

      Delete
    2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ''..துயரைச் சுமக்கத் தெரிந்தது போல
    மகிழ்வைச் சுமக்கத் தெரியாமல் இருப்பதே..''
    இது தான் பிரச்சனை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. எவர் முகத்திலும் துயரே தெரிகிறதே!
    எண்ணி எண்ணிப் பார்த்தேன்
    நம்மாளுகள் உள்ளத்திலே
    மகிழ்வு வந்து போகிறதே தவிர
    துயரம் தான் குந்தி விடுகிறதே!//

    மனதை தொடும் வரிகள்...விடியல் விரைவில் வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. துயரம் இருந்தாலும், அதன் நடுவிலும் மகிழ்வு நிறைத்து நல்ல தருணங்களை நினைத்து மனதை இன்பமாக வைத்திருப்பதே நல்லது..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.