என் அழகுத் தோழி!
முதலில்
ஓரடி உண்மையென
அடுத்து
மூன்றடியில் துளிப்பாவென (ஹைக்கூவென)
அதற்கடுத்து
ஐந்தடியில் குறும்பாவென (லிமரிக் என)
அடுத்தடுத்தும் பார்த்தேன்
அடி, அடியாக அடுக்கி
புதுப்பாவெனப் பல புனைந்து - உன்
பாப்புனையும் ஆற்றலை
கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டுறியே!
ஈற்றில்
உன் பாக்களின் வாசகனானேன் - அதனால்
உன் பெயரைக் கேட்க - நீயோ
கவிதா (பாதா) என்கிறாய் - நானோ
உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ
ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவரே!
இன்று - நீ
என் அறிவுத் தோழி!
"பெயரைக் கேட்கையிலே - அவள்
கவிதா (பாதா) என்றாள் - நானோ
கவிதையோ பாவோ எழுத
முடியாமையை உணர்ந்தே - அவளை
மறந்து போய்விட்டேனே!" என்று
பாப்புனைய வைத்துவிட்டாயே!
அருமை ஐயா
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அழகுத் தோழியை அறிவுத் தோழி வென்றுவிட்டார் போலிருக்கே :)
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அழகிய தோழியை ரசித்தேன்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
எமக்கு அழகை ரசிக்க தெரியாதவன் என்று பெயர் சூட்டிவிட்டார்கள்.அதனால் அழகிய தோழியை ரசிக்கத் தெரியாதவனாகிவிட்டேன்.
ReplyDeleteஅழகிய தமிழை ரசிக்கத் தெரிந்தமையால
Deleteதங்கள் கருத்துக் கூட
கவிதை ஆக அமைகிறதே!
மிக்க நன்றி.
கவிதாவே அன்பாய் அருகிருக்க இன்பமே
ReplyDeleteஉன்பாவை நன்றே இயற்று!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteசிறப்புடன் பாப்புனைய வைத்த அழகிய அறிவுத்தோழிக்கு வாழ்த்துக்கள்.கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்கள் அறிவுத் தோழி கவிதா வை மிகவும் ரசித்தோம்!!! நண்பரே!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.