Tuesday, 11 November 2014

கெட்ட, கேடு கெட்ட


வயிற்றுப் பசி போக்க
உழைக்கின்றோம்...
உழைப்பில்லாத வேளை
வயிற்றுப் பசி போக்க
முடியாது அழுகின்றோம்...
அழுதால் பசி போக்கலாமா?

உழைத்தால் தான்
பசி போக்கலாம் என்றால்
களவு எடுத்தலும் பிச்சை எடுத்தலும்
பிறர் விருப்பைப் போக்க
தன் உடலைக் கூலிக்கு விடுவதும்
(விலைப் பெண், விலை ஆண்)
உழைப்பு ஆகுமா?

பசி போக்கப் பணம் வேண்டுமெனில்
தமது
உள உழைப்பையோ
உடல் உழைப்பையோ
செய்ய முயற்சிக்கலாமே...
ஆனால்
மாற்றாருக்குத் தீங்கிழைக்காத
உழைப்பைத் தெரிவு செய்தீர்களா?

நடுத் தெருவில்
நான் கூடப் பிச்சை எடுக்கையில்
"அடே எருமைக்கடா - அந்த
எருமை கூட சூடு தணிக்க
சேற்றுக் குளியலை நாடுதே - நீ
உன் வயிற்றுப் பசி போக்க
ஒழுங்கான தொழிலைப் பாரடா!" என்று
தெரு வழியே சென்ற நல்லவர்
ஒரு வேளை உணவும் தந்து
தொழில் ஒன்றை ஒழுங்கு செய்தும்
இனிப் பிச்சை எடுத்தால்
சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று
எச்சரித்து வழிகாட்டியுமிருந்தாரே!

வழிகாட்டிகள் சொல்லியும் கூட
எந்தப் பக்கம் பார்த்தாலும்
கெட்ட, கேடு கெட்ட
தொழில் செய்வோர் தான்
கண்ணுக்கு எட்டுகிறார்களே...
"என்னடாப்பா
தொழிலில் கூட...
கெட்ட, கேடு கெட்ட தொழில் என்று
ஒன்றுமில்லையே" என்று
என் மூக்குடைக்க வாராதீர்கள்...
நற்பெயரைத் தரும்
சூழல் எம்மைப் போற்றும்
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும்
தொழிலே
கெட்ட, கேடு கெட்ட
தொழில் இல்லையென்று சொல்ல வந்தேன்!

14 comments:

  1. யாழ்பாவாணன்,

    உங்கள் சிந்தனை சிந்திய சிறப்பு கவிதைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    கோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. சிந்தனைக்குறிய கவிதை அருமை நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று சொன்ன இந்த பிச்சையை என்னவென்று சொல்வது............????????????

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. கவிதை வழியே சிந்தனை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஆதி அந்தம் இல்லாத தொழிலாச்சே அது ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. சிந்திக்க வைக்கும் கவிதை
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்தும் அருமையான கவிதை நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.