இரு உள்ள(மன)ங்கள் விருப்பம் கேட்காமலே
திருமணங்கள் நடக்கின்றன...
திருமணங்கள் நடந்தேறியும் கூட
இரு உள்ள(மன)ங்கள்
மகிழ்வாகக் கூடி வாழ முடியவில்லையாமே!
பெற்றோர்கள்
தமக்குப் பொருத்தம் பார்க்கிறார்கள்...
பிள்ளைகள்
உள்ள(மன)ங்கள் பொருத்தம் இல்லாமலே...
பெற்றோர்களுக்கு
திருமணக் கொண்டாட்டம்...
பிள்ளைகளுக்கு
திருமணத் திண்டாட்டம்...
இந்தச் சிக்கலை
சொந்தச் சிக்கலாகக் கருதி
எந்தப் பெரியோராவது
இதற்குத் தீர்வு சொல்லமாட்டார்களா?
இதற்குத் தீர்வு இல்லையென்றால்
பிள்ளைகளைக் கரை சேர்த்தாச்சென
பெற்றோர்கள் நிறைவடைய...
பழசுகள் மாட்டிவிட்டிட்டுச் சிரிக்க
தாம் மாட்டிக்கிட்டு முளிப்பதாய்
பிள்ளைகள் துயரடைய...
குடும்ப வாழ்வு
சாவை நோக்கியே நகரவே செய்யுமே!
பிள்ளைகளின் விருப்பறியாது
பிள்ளைகள் எப்படியாது வாழுமென
பிள்ளைகள் கரை சேர்த்தால் போதுமென
திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள்
எப்பதான் பின்விளைவை உணருவார்களோ?
பிள்ளைகளுக்கு
மகிழ்வான வாழ்வமைத்துக் கொடுக்க
பெற்றோர்களுக்கு
கற்றுக்கொடுக்க முன்வாருங்களேன்!
நிச்சயமாக பெற்றோர்கள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மனம் ஒத்திருக்கின்றதா என்று பார்த்து மணம் பேச வேண்டும். சில சம்யங்களில் பார்க்கும் சமயம் ஒத்துப் போவது போல் இருக்கலாம் ஆனால் நாளடைவில் அது விரிசல் அடையலாம். எனவே இதில் பல விடயங்களை அலசிப்பார்த்துச் செய்வதே நல்லது....உண்மையான அன்பு என்றுமே உடையாது
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
பணங்கள் மனங்களை மாற்றி விடுகிறது...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
சமூகத்தில் நிலவும் சிந்தனைதான் பெற்றோர்களை இப்படி வளைத்து செல்கிறது.
ReplyDelete
Deleteஉண்மை தான்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
உண்மைதான் பலபெற்றோர்கள் பணத்தை மட்டுமே பார்க்கிறார்கள் மனதை பார்ப்பதில்லை.
ReplyDelete
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
பத்து நாட்கள் முன் தொலைக்காட்சியில் ......மணமகள் தாலி கட்டிக்க மாட்டேனென்று கதற கதற குனிகிறாள் ,ஆனாலும் உறவினர்கள் அந்த பெண்ணை தூக்கி நிறுத்தி ,தாலி கட்ட வைக்கிறார்கள் ,இன்றும் அந்த பெண்ணின் நினைப்பாகவே இருக்கிறது ,பாவம் அந்தப் பெண் ,என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறாளோ ?
ReplyDeleteஉங்கள் கருத்தை பார்த்ததும் இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது !
Deleteஉண்மை தான்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
நல்ல பகிர்வு...
ReplyDeleteபகவான்ஜி சொன்ன திருமணத்தை முகநூலில் பார்த்தேன்... பாவம் அடாவடியான திருமணம்...
உண்மை தான்!
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
இக்கவிதையை பார்த்தவுடன் என்றோ நான் இவ்வாறு எழுதிய சிறு கவிதான் நினைவுக்கு வந்தது !
ReplyDeleteஇறுதி மூச்சை
இழுத்த வண்ணம்
தான் நினைத்த
மாப்பிள்ளைக்கே
தன மகளை
கட்டிக் கொடுத்த
பெருமிதத்தை நினைத்தபடி
விழிமூடும் தந்தைக்கு
கண்ணீர் கலந்து கடைசி நீர்
பருக்கிக் கொண்டிருந்தாள் மகள்
அவரால் அழிந்துபோன
தன் காதலை
நினைத்த வாறே !
---------------
https://www.facebook.com/photo.php?fbid=416302825094089&set=a.110348662356175.6368.100001431255610&type=3&theater
இப்படித்தான் இன்னும் சில பெற்றோர்கள் பிள்ளைகளை விருப்பம் இன்றியே விதியில் தள்ளி விடுகிறார்கள் !
அருமையான கவிதை யதார்த்தமும் கூட
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் சொல்ல வந்த செய்திக்கு
Deleteஉயிர் கொடுத்த பின்னூட்டமாக
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.