அதற்கு அறிஞர் பேர்னாட்ஷா என்ன கூறியிருப்பார்?
அந்த அழகிய நடிகையைப் பார்த்து "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?" என்று அறிஞர் பேர்னாட்ஷா கேட்டதும் அந்த நடிகை அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டாளாம்.
இந்தத் தகவலை நாளேடு ஒன்றில் படித்தேன். படித்ததும் "இப்படி நானும் எழுதினால் என்ன?" என்று எழுதியதைக் கீழே தருகின்றேன். எனது கைவண்ணத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.
இல்லாள் வள்ளி இல்லாத வேளை அயலாள் பொன்னி அறிஞர் பேர்னாட்ஷா பற்றி நாளேடு ஒன்றில் படித்ததாகக் கூறிப் பொன்னனிடம் கேள்வி கேட்கின்றாள்.
பொன்னி: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற கதை/பாட்டுப் புனையும் ஆற்றலுடன் உங்களைப் போன்ற அழகும் இணைந்த பிள்ளை பிறக்குமே!
பொன்னன்: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற வேளாண்மை செய்யும் ஆற்றலுடன் உங்களது நிறைவேறாத விருப்பமும் (ஆசையும்) இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?"
பொன்னி: நீங்கள் அழகு இல்லாதவரா? எனக்கு நிறைவேறாத விருப்பம் (ஆசை) இருப்பதை எப்படி அறிவீர்?
பொன்னன்: எனக்கு வேளாண்மை செய்தமையால் உடற்கட்டு இருக்கலாம். அது அழகில்லையே! நானும் நீரும் கூடிப் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என்கிறியே - அது உன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!
பொன்னி: உடற்கட்டு மன்னவரே! நானும் நீரும் கூடினால் பிள்ளை பிறக்காதா? பிறகேன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) என்பீர்?
பொன்னன்: பிள்ளாய்! என் இல்லாள் வள்ளிக்கு இந்தக் கதை தெரிந்தால். நீ உயிரோடு இருக்கவே உனக்குக் கொள்ளி வைப்பாளே! அப்படி என்றால் உன் எண்ணம் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!
அந்த நேரம் வள்ளி வீட்டிற்குள் நுழையப் பொன்னி வாயடைத்துப் போட்டாள். பொன்னனும் மூச்சு விடவில்லை. ஏதோ வள்ளியும் பொன்னியும் பறைய, பொன்னன் வீட்டு முற்றத்தில் இறங்கினான்.
பொருத்தமான வசனங்கள் அருமை நண்பரே....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
சரியான உரையாடல் தான்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
ம்ம்ம் நல்ல கற்பனையான உரையாடல்....
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
தேவையா இது??????????????????, கற்பனை அருமை.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteமிக்க நன்றி.
பாலமகி பக்கங்களில் ஆர் டி எக்ஸ் பாம்.
ReplyDeleteபார்வையிடுகிறேன்
Deleteமிக்க நன்றி.